»   »  ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி போடும் மலர் டீச்சர்?

ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி போடும் மலர் டீச்சர்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக 'பிரேமம்' சாய் பல்லவி நடிக்கப் போகிறார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழின் வளரும் நடிகர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் தற்போது கடவுள் இருக்கான் குமாரு, புரூஸ்லீ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

Sai Pallavi Pair with G.V.Prakash

இவர் நடிப்பில் அடுத்ததாக எனக்கு இன்னொரு பேர் இருக்கு படம் ஜூன் 10 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகின்றது.இப்படத்தின் டிரெய்லரை வருகின்ற 1 ம் தேதி இயக்குநர் முருகதாஸ் வெளியிடுகிறார்.

'மின்சாரக் கனவு', 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' புகழ் ராஜீவ் மேனன்-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளனர்.

இப்படத்தில் ஹீரோவாக ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தமாகியிருக்கிறார்.இந்நிலையில் 'பிரேமம்' புகழ் சாய் பல்லவி, ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது சாய் பல்லவியுடன் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகக் கூறுகின்றனர். இதனை ஜி.வி.பிரகாஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரீட்வீட் செய்து உறுதிப்படுத்தியிருக்கிறார்.

எனவே விரைவில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.முன்னதாக கார்த்தி ஜோடியாக மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவிருந்த சாய் பல்லவி யாரும் எதிர்பாராத வண்ணம் அப்படத்திலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

English summary
Sources said Sai Pallavi Opposite Pair with G.V.Prakash for Rajiv Menon Next movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil