»   »  நான்கு வயது சிறுமிக்கு அம்மாவாக சாய் பல்லவி!

நான்கு வயது சிறுமிக்கு அம்மாவாக சாய் பல்லவி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இயக்குநர் விஜய் இயக்கத்தில் கதை நாயகியாக சாய்பல்லவி நடிக்கும் கரு படத்தில் சாய் பல்லவி நான்கு வயது சிறுமிக்கு அம்மாவாக நடிக்கிறாராம்.

ப்ரேமம் மூலம் அறிமுகமாகி எல்லோரையும் தேட வைத்தவர் சாய் பல்லவி. மேக்கப்பே இல்லாமல் இயல்பாக பரு முகத்துடன் அறிமுகமான கோவைப் பெண்ணை தென் இந்திய ஹீரோக்களே தேடினார்கள். ஆனால் யாருக்கும் சிக்காத சாய் பல்லவி இப்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கரு என்ற படம் மூலம் தமிழுக்கு வருகிறார்.

Sai Pallavi plays mother role

இந்த கரு படத்தில்தான் நான்கு வயது சிறுமிக்கு அம்மாவாக நடிக்கிறாராம். அம்மா மகள் இடையே இருக்கும் பாசப் பிணைப்புகள் தான் படத்தின் மையக் கதையே. படப்பிடிப்பு முடிந்து டப்பிங் வேலைகள் போய்க்கொண்டிருக்கிறது.

English summary
Actress Sai Pallavi is playing as a mother for four years old girl in upcoming Karu movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil