திருமணம் பற்றி கேட்டவர்களுக்கு சாய் பல்லவி கொடுத்த பதில்

சென்னை : மலையாளத்தில் டைரக்டர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சாய் பல்லவி. ஆனால் சாய் பல்லவி, பிரேமம் படத்தில் நடிப்பதற்கு முன்பே தமிழில் ஜெயம் ரவி நடித்த தாம்தூம் படத்தில் நடித்துள்ளார் என்ற தகவல் சமீபத்தில் தான் வெளியிடப்பட்டது.

பிரேமம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கில் சாய் பல்லவிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தெலுங்கில் இவர் நடித்த பல படங்கள் வசூல் சாதனை, யூட்யூப்பில் சாதனை என பல சாதனைகளை படைத்துள்ளன. இவரது நடிப்பும் பல படங்களில் பெரிய அளவில் பேசப்பட்டுள்ளது.

சாதனை படைத்த ரவுடி பேபி

சாதனை படைத்த ரவுடி பேபி

தமிழில் தனுஷுடன் மாரி 2, சூர்யாவுடன் என்ஜிகே, கரு உள்ளிட்ட படங்களில் நடித்தார் சாய் பல்லவி. இவற்றில் மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் யூட்யூப்பில் 200 மில்லியன் பார்வைகளை பெற்று, புதிய சாதனையே படைத்து விட்டது. யூட்யூப்பில் அதிக பார்வைகளை பெற்ற பாடல்களின் வரிசையில் ரவுடி பேபி பாடல் தான் நீண்ட நாட்களாக முதலிடத்தில் இருந்தது.

பாராட்டை பெற்ற சாய் பல்லவி நடிப்பு

பாராட்டை பெற்ற சாய் பல்லவி நடிப்பு

நெட்ஃப்ளிக்சில் வெளியிடப்பட்ட வெற்றிமாறனின் பாவ கதைகள் படத்தில், கவுரவ கொலையால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்த சாய் பல்லவியின் நடிப்பு பெரிய அளவில் பாராட்டை பெற்றது. தற்போது தெலுங்கில் லவ் ஸ்டோரி உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார் சாய் பல்லவி.

Recommended Video

Asin நடிக்க வேண்டிய படத்தை தண்டிப்பறித்த Sai Pallavi | Premam, Alphonse Puthren
நீலகிரியில் ஹால்ட்

நீலகிரியில் ஹால்ட்

தற்போது சாய் பல்லவி, தனது சொந்த ஊரான நீலகிரி மலையில் உறவினரின் திருமணத்திற்காக சென்றுள்ளார். அங்கு தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட ஜாலி ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் சாய் பல்லவி.

படுகர் மொழியில் கேப்ஷன்

படுகர் மொழியில் கேப்ஷன்

அத்துடன், மதுவே ஸ்குவாட் என்ற கேப்ஷனை பதிவிட்டுள்ளார். சாய் பல்லவியின் தாய் மொழியான படுகர் மொழியில் இந்த வார்த்தைக்கு, திருமணமும் அதன் பட்டாளமும் என அர்த்தமாம். சாய் பல்லவியின் இந்த ஃபோட்டோக்களை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

 திருமணத்திற்கு இதுதான் பதிலாம்

திருமணத்திற்கு இதுதான் பதிலாம்

ரசிகர்கள் பலர் சாய் பல்லவியிடம் அடிக்கடி அவரது திருமணம் பற்றி கேள்வி கேட்டு வருகிறார்களாம். அப்படி கேட்பவர்களுக்கு பதில் அளிக்கவே சாய் பல்லவி இந்த ஃபோட்டோக்களை பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X