ரூ. 40 லட்சம்ப்பு: ரஜினி, கமல் போன்று பெரிய காரியம் செய்த சாய் பல்லவி
ஹைதராபாத்: தான் நடித்த படத்திற்கான சம்பள பாக்கியை வாங்க மறுத்துள்ளார் சாய் பல்லவி.
சாய் பல்லவி நடிப்பில் டிசம்பர் மாதம் இரண்டு படங்கள் ரிலீஸானது. ஒன்று மாரி 2, மற்றொன்று ஷர்வானந்துடன் சேர்ந்து அவர் நடித்த தெலுங்கு படம் படி படி லேச்சு மனசு.
படி படி லேச்சு மனசு எதிர்பார்த்தபடி ஓடவில்லை. இதனால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

சாய் பல்லவி
படி படி லேச்சு மனசு படத்தில் நடித்த சாய் பல்லவிக்கு முன்பணம் கொடுத்துவிட்டு மீதத் தொகையை பின்னர் தருகிறோம் என்று கூறியிருக்கிறார்கள். இந்நிலையில் படம் ரிலீஸான பிறகு சம்பள பாக்கி ரூ. 40 லட்சத்தை தயாரிப்பாளர் அவரிடம் கொடுக்க அவரோ வாங்க மறுத்துவிட்டாராம்.

படம்
படி படி லேச்சு மனசு படம் ரூ. 22 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்ட நிலையில் வெறும் 8 கோடி மட்டும் தான் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர், வினியோகஸ்தர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் தான் அவர் தனது சம்பளத்தை விட்டுக் கொடுத்துள்ளாராம்.

பாராட்டு
ரூ. 40 லட்சம் சம்பளத்தை சாய் பல்லவி விட்டுக் கொடுத்தது குறித்து அறிந்த டோலிவுட் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் அவரை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த பொண்ணுக்கு பெரிய மனசு என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

நல்ல பெயர்
சாய் பல்லவியின் பெயர் தேவையில்லாத விஷயங்களில் அடிபட்டு அவர் திமிர்பிடித்தவர் என்ற பேச்சு கிளம்பியது. இந்நிலையில் அவர் தற்போது செய்துள்ள காரியத்தால் அவரின் நல்ல குணம் திரையுலகினருக்கு தெரிய வந்துள்ளது. முன்பு ரஜினிகாந்த், கமல் ஹாஸன் போன்றோர் படங்கள் தோல்வி அடைந்தால் சம்பளத்தை விட்டுக் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











