»   »  இனி தற்கொலை முயற்சி செய்ய மாட்டேன்... ஆறுதல் சொன்னவர்களுக்கு நன்றி: டிவி நடிகர் சாய் சக்தி

இனி தற்கொலை முயற்சி செய்ய மாட்டேன்... ஆறுதல் சொன்னவர்களுக்கு நன்றி: டிவி நடிகர் சாய் சக்தி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது தற்கொலை முயற்சிக்குக் காரணம் எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலே காரணம் என்று வாட்ஸ்அப்பில் கூறியுள்ளார்.

மனைவி நல்ல மனைவி, குழந்தை இருந்தாலும், வருமானம் இல்லாமல் போனது. எனது மாமனார் வீட்டினர் மனஉளைச்சலை ஏற்படுத்தினர். கொலை செய்து விடுவதாக மிரட்டினர் என்றும் சாய் சக்தி கூறியுள்ளார். என்னை அழைத்து பேசி ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Sai Sakthi suicide attempt reason - whats app audio

நாதஸ்வரம், வள்ளி, சொந்த பந்தம், சரவணன் மீனாட்சி, சபீதா என்கிற சபாபதி என பல தொடர்களில் நடித்தவர் சாய் சக்தி. தற்போது அவரது கைவசம் எந்த சீரியல்களும் இல்லை. இதனால் போதிய வருமானம் இல்லாமல் அவர் தற்கொலை முயற்சியில் இறங்கியதாக வாட்ஸ்அப்புகளில் செய்தி வெளியானது.

சமீபத்தில் சின்னத்திரை நடிகர் சாய் பிரசாந்த் தற்கொலை செய்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீளாத திரையுலகம் சாய்சக்தியின் இந்த தற்கொலை முயற்சி வெளியானதை அடுத்து அதிர்ச்சியடைந்துள்ளது. இதையடுத்து பலரும் அவரை தொடர்பு கொண்டு நலம் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மீண்டும் வாட்ஸ் மூலம் தனது தற்கொலை முயற்சிக்குக்கான காரணத்தை கூறியுள்ளார்.

எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலே தற்கொலை முயற்சி செய்ய காரணம் கூறியுள்ள சாய் சக்தி, மனைவி நல்ல மனைவி, குழந்தை இருந்தாலும், வருமானம் இல்லாமல் போனது. எனது மாமனார் வீட்டினர் மனஉளைச்சலை ஏற்படுத்தினர். கொலை செய்து விடுவதாக மிரட்டினர் என்றும் சாய் சக்தி தெரிவித்துள்ளார்.

நான் 12 வயதிலேயே நடிக்க வந்து விட்டேன். இப்போது எனக்கு 23 வயது ஆகிறது. குடும்பத்தில் மூத்த பையன் என்பதால் அனைவரையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. அம்மா, பாட்டி, தங்கை, மனைவி, மகள் என என் குடும்பமே என்னை நம்பிதான் உள்ளது.

ஆனால் சபீதா என்கிற சபாபதி தொடருக்கு பிறகு இப்போது என் கைவசம் எந்த சீரியல்களுமே இல்லை.

வேலை வெட்டி இல்லாமல் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கிறேன். சுத்தமாக வருமானமே இல்லை. பல கம்பெனிகளுக்கு போன் செய்து நடிக்க சான்ஸ் கேட்டு பார்த்து விட்டேன். யாரும் தரவில்லை. அதனால் நாளுக்கு நாள் எனக்கு மன உளச்சல் அதிகமானது.

இதற்கிடையே எனது மாமனார் வீட்டிலும் எனக்கு பிரச்சினை கொடுத்து விட்டனர். என் மனைவி முக்கால்வாசி மனநிலை பாதிக்கப்பட்டவள். என்ற போதும் நான் அவளை திருமணம் செய்தேன். எங்களது முதல் மகள் இறந்து விட்டாள். இப்போது 8 மாத குழந்தை உள்ளது.

இந்நிலையில், சில சமயங்களில் பணத்தேவைக்காக மனைவியின் நகையை அடமானம் வைப்பேன். இது எல்லா குடும்பத்திலும் நடப்பதுதானே. ஆனால் இதற்கு என் மாமனார் வீட்டில் பிரச்னைக்கு வருகிறார்கள். குடும்பத்துடன் சேர்ந்து இருக்க வேண்டாம். தனிக்குடித்தனம் செல் என்கிறார்கள்.

என்னை நம்பி இருக்கும் குடும்பத்தை தனியே விட்டுவிட்டு நான் மட்டும் எப்படி தனியே செல்ல முடியும். அதற்கு நான் மறுத்ததால் அடியாட்களை அனுப்பி கொலை செய்து விடுவேன். ஆசிட் ஊற்றி விடுவன் என்று மிரட்டுகிறார்கள். ஒரு பக்கம் வேலை இல்லாத மன உளச்சல், இன்னொரு பக்கம் மாமியார் வீட்டு டார்ச்சரினால் மன உளச்சல் என மனசு நொந்து விட்டேன்.

இப்படி அவர்கள் கொடுக்கிற பிரச்சினை காரணமாக ஒரு முறை வீட்டில் தூக்குப்போடச் சென்றேன். இன்னொரு முறை ஏரியில் குதித்து உயிரை விட முயற்சி எடுத்தேன். அப்போதெல்லாம் என் அம்மாதான் தடுத்து நிறுத்தி எனக்கு அறிவுரை கொடுத்தார்.

இருப்பினும், நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் வருமானம் இல்லாத பிரச்னை, மாமனார் வீட்டு பிரச்னை என இந்த இரண்டும் என்னை துரத்தியதினால்தான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன்.

என் மாமியாரின் அண்ணன்தான் என்னை மிரட்டினார். கொலை செய்து விடுவதாக ஆசிட் ஊற்றி விடுவதாக மிரட்டினர். இந்த மனஉளைச்சல்தான் என்னை தற்கொலைக்கு விரட்டியது.

ஆனால் எனது இந்த செய்தி வாட்ஸ் அப்புகளில் பரவியதை அடுத்து திரையுலகம், மீடியா நண்பர்கள் பலரும் என்னை தொடர்பு கொண்டு அட்வைஸ் கொடுத்ததோடு உதவிக்கரம் நீட்டவும் முன்வந்துள்ளனர். சிலர் பண உதவி தர முன்வந்தனர். ஆனால் நான் வாங்கவில்லை. எனக்கு நடிப்பதற்கு ஏதாவது வாய்ப்பு கொடுங்கள் என்று கூறிவிட்டேன்.

இப்போது ஆன்மீகம், பிரேயரில் மனதை திருப்பியிருப்பதாகவும், ஒரு மருத்துவரிடம் மன உளச்சலுக்கு சிசிக்கை பெறப் போகிறேன். எனக்கு நிறைய பேர் போன் செய்து பேசினர். நடிகர் சங்கத்தில் இருந்து போன் செய்தனர்.

டிவி நடிகர், நடிகையர்கள் போன் செய்தனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி இனி தவறான முடிவு எடுக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் சாய் சக்தி.

English summary
Television serial actor Saisakthi whats app audio for suicide attempt.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil