»   »  நடுராத்திரியில் என் மனைவிக்கு எதற்கு போன் செய்த?: நடிகர் அர்ஜுன் கபூரை விளாசிய சைப் அலி கான்

நடுராத்திரியில் என் மனைவிக்கு எதற்கு போன் செய்த?: நடிகர் அர்ஜுன் கபூரை விளாசிய சைப் அலி கான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தனது மனைவி கரீனா கபூருக்கு நள்ளிரவு 12 மணிக்கு போன் செய்த நடிகர் அர்ஜுன் கபூரை நடிகர் சைப் அலி கான் திட்டியுள்ளாராம்.

பால்கியின் இயக்கத்தில் அர்ஜுன் கபூர், கரீனா கபூர் ஜோடியாக நடித்துள்ள படம் கி அன்ட் கா. ஏப்ரல் மாதம் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படத்தை விளம்பரப்படுத்தும் முயற்சியில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

சிறுவனாக இருக்கையில் அர்ஜுனுக்கு கரீனா மீது ஒரு ஈர்ப்பு இருந்ததாம் அதாங்க கிரஷ். இந்நிலையில் கரீனாவுடன் நடித்ததில் அவருக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

உல்டா

உல்டா

படத்தில் அர்ஜுன் வீட்டு வேலைகளை செய்து மனைவியை கவனித்துக் கொள்ளும் கணவராக நடித்துள்ளார். கரீனா வேலைக்கு சென்று சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றும் மனைவியாக நடித்துள்ளார்.

முத்தம்

முத்தம்

லிப் டூ லிப் முத்தக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று கூறி வந்த கரீனா கி அன்ட் கா படத்தில் அர்ஜுனுக்கு லிப் டூ லிப் கொடுத்து தனது கொள்கையை தளர்த்தியுள்ளார்.

அர்ஜுன்

அர்ஜுன்

அர்ஜுன் கபூர் நள்ளிரவு 12 மணிக்கு கரீனா கபூருக்கு போன் செய்துள்ளார். அர்ஜுன் காலிங் என்று வந்ததை பார்த்த கரீனாவின் கணவரும், நடிகருமான சைப் அலி கான் போனை எடுத்து பேசியுள்ளார்.

திட்டு

திட்டு

நடுராத்திரியில் எதற்காக என் மனைவிக்கு போன் செய்தீர்கள். ஒரு பெண்ணை நள்ளிரவில் தொடர்பு கொள்வது சரி இல்லை என்பது உங்களுக்கு தெரியாதா. என்ன அவசரமாக இருந்தாலும் காலையில் போன் செய்ய வேண்டியது தானே. கரீனா உங்களின் சீனியர் என்ற நினைப்பு இருக்கட்டும் என சைப் அர்ஜுன் கபூரை விளாசித் தள்ளியுள்ளார்.

English summary
Saif Ali Khan is very possessive for Kareena Kapoor and the actor did not like Arjun Kapoor getting too friendly with his darling wife. Reportedly, Arjun Kapoor called Kareena Kapoor after 12 A.M and Saif Ali Khan got quite miffed with it.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil