»   »  கண்ணு பட்டுடும்ல: ஹீரோவை திட்டிய நடிகை

கண்ணு பட்டுடும்ல: ஹீரோவை திட்டிய நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மகன் தைமூர் அலி கானின் புகைப்படத்தை வெளியிட்டதற்காக நடிகை கரீனா கபூர் கோபம் அடைந்தார் என பாலிவுட் நடிகர் சயிப் அலி கான் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் சயிப் அலி கானின் மனைவியும், நடிகையுமான கரீனா கபூர் கடந்த டிசம்பர் மாதம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு தைமூர் அலி கான் என பெயர் வைத்துள்ளனர்.

இந்நிலையில் சயிப் தைமூரின் புகைப்படத்தை தனது வாட்ஸ்ஆப் டிபியாக வைக்க அது அனைவருக்கும் கிடைத்துவிட்டது. இது குறித்து சயிப் கூறுகையில்,

கரீனா

கரீனா

தைமூரின் புகைப்படம் வெளியானதில் எனக்கு எந்த கவலையும் இல்லை. ஆனால் கரீனாவுக்கு தான் பிடிக்கவில்லை. மகனின் புகைப்படத்தை ஏன் வெளியிட்டீர்கள் என்று கோபப்ட்டார்.

தைமூர்

தைமூர்

குழந்தையின் புகைப்படம் வெளியானால் அதை பார்த்து கண் பட்டுவிடும் என்று கரீனா கூறினார். கண் பட்டிருந்தால் இந்நேரம் கரீனா மருத்துவமனையில் அல்லவா இருந்திருக்க வேண்டும்.

கண்

கண்

குழந்தைக்கு கண் படுவதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் யாருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்யவில்லை. வாட்ஸ்ஆப் டிபியாக போட அது அப்படியே பரவிவிட்டது. பரவாயில்லை.

மகன்

மகன்

தைமூரை மறைத்து மறைத்து வளர்க்க விரும்பவில்லை. தைமூர் ஏற்கனவே பிரபலமாகிவிட்டார். தலைக்கனம் இல்லாமல் எப்படி இருக்க வேண்டும் என தைமூருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என சயிப் தெரிவித்துள்ளார்.

English summary
Actor Saif Ali Khan said that his wife Kareena Kapoor was not happy with the way their son Taimur's photo went viral.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil