»   »  காட்டேரி... சாய்குமாரின் மகனுக்கு ஜோடியாகும் ஓவியா!

காட்டேரி... சாய்குமாரின் மகனுக்கு ஜோடியாகும் ஓவியா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்துக்கு காட்டேரி என்று தலைப்பிட்டுள்ளனர். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டீகே. இவர் ஏற்கனவே யாமிருக்க பயமே, கவலை வேண்டாம் ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் மூலம் கன்னடம், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் நடிகர் சாய்குமார் மகன் ஆதித்யா கதையின் நாயகனாக அறிமுகமாகிறார்.

Saikumar son makes debut in Tamil

நாயகியாக இன்றைய இளைஞர்களின் சென்சேஷன் நடிகை ஓவியா நடிக்கிறார். இப்படத்தின் தொடக்கவிழா சென்னை சத்யம் திரையரங்கத்தில் எளிமையாக நடைபெற்றது.

Saikumar son makes debut in Tamil

இந்த தொடக்க விழாவில் நடிகர் சாய்குமார், அறிமுக நாயகன் ஆதித்யா, கௌதம் கார்த்திக், இயக்குநர் டீகே, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மற்றும் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். அதன் போது காட்டேரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது.

English summary
Actress Oviya is accepting more new movies after her successful big boss show. Kaatteri is one among them

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X