நாங்கள் செய்த அந்த விஷயம்.. பேசி கடைசியில்தான் முடிவெடுத்தோம்.. ஜிவி பிரகாஷ் பற்றி சைந்தவி உடைத்த உண்மை
சென்னை: ஜிவி பிரகாஷும் சைந்தவியும் பள்ளியில் படிக்கும்போதே காதலித்தார்கள். நீண்ட வருடங்கள் தொடர்ந்து அவர்களது காதல் வீட்டு சம்மதத்துடன் திருமணத்தில் முடிந்தது. அந்தத் தம்பதிக்கு அன்வி என்ற மகளும் இருக்கிறார். சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண பந்தம் கடந்த வருடம் முறிந்தது. இந்நிலையில் சைந்தவி தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் மனம் திறந்து பல விஷயங்களை பேசியிருக்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகனான ஜிவி பிரகாஷ் வெயில் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது அட்டகாசமான இசையால் அனைவரையும் ஈர்த்துவிட்டார். இதன் காரணமாக பெரிய ஹீரோக்களின் படங்களும் அவருக்கு புக் ஆகின. அப்படி அவர் அஜித்தின் கிரீடம், ரஜினியின் குசேலன் என பல படங்களுக்கு வரிசையாக இசையமைத்தார். ஒவ்வொரு படத்திலும் தனது அட்டகாசமான இசையை வெளிப்படுத்தியிருந்தார்.
தேசிய விருது: ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன என பல படங்களில் தனித்துவமான இசையை கொடுத்த அவர் தேசிய அளவில் அங்கீகரிக்கப்படாமலேயே இருந்தார். இது அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பலரிடமும் பேசுபொருளானது. இப்படிப்பட்ட நிலைமையில்தான் சூர்யா நடித்த சூரரைப் போற்று, தனுஷ் நடித்த வாத்தி ஆகிய படங்களுக்கு இசையமைத்ததற்காக தேசிய விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹீரோ அவதாரம்: இது ஒருபக்கம் இருக்க அவருக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை உண்டானது. அதனை நிறைவேற்றிக்கொண்ட அவர் தொடர்ந்து ஹீரோவாக நடித்துவருகிறார். பாலா, ராஜீவ் மேனன், சசி என முக்கியமான இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்தாலும் பெரிய வெற்றி கிடைக்கவில்லை. இப்போது செல்வராகவன் இயக்கத்தில் மென்டல் மனதில் என்ற படத்தில் நடித்துவருகிறார்.
பெர்சனல் வாழ்க்கை: இதற்கிடையே பள்ளியில் படிக்கும்போதே தனது ஜூனியரான சைந்தவியை காதலித்தார் ஜிவி. இரண்டு பேரின் காதலும் நீண்ட வருடங்கள் நீடித்தது. பிறகு வீட்டு சம்மதம் கிடைத்தை அடுத்து இரண்டு பேரும் திருமணம் செய்துகொண்டார்கள்.கோலிவுட்டின் ஃபேவரைட் ரியல் ஜோடிகளில் ஒன்றாக அவர்கள் வலம் வந்துகொண்டிருந்தார்கள். அன்வி என்ற மகள் இருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில் இரண்டு பேரும் விவாகரத்து பெற்றுவிட்டார்கள்.
தொழில்ரீதியாக ஒற்றுமை: அவர்கள் பெர்சனல் வாழ்க்கையிலிருந்து தனித்தனியாக பிரிந்தாலும் தொழில்ரீதியாக ஒற்றுமையாகவே இருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டில் நடந்த ஜிவி பிரகாஷின் இசை நிகழ்ச்சி, நா.முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்ச்சி உள்ளிட்டவைகளில் மேடையில் இரண்டு பேரும் சேர்ந்து ஃபெர்பார்ம் செய்தார்கள் எனது கவனிக்கத்தக்கது. இது பலரிடமும் பாராட்டை பெற்றது.
சைந்தவி பேட்டி: இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "ஜிவி பிரகாஷ் குமார் கான்செர்ட்டில் யார் யார் என்னென்ன பாடல் பாட வேண்டும் பேசி வைக்கப்பட்டிருந்தது. கடைசி நேரத்தில்தான் யார் இந்த சாலையோரம் பாடலை நானும், ஜிவி பிரகாஷும் சேர்ந்து ஃபெர்பார்ம் செய்வது என்று பேசி முடிவெடுத்தோம்" என்றார். அவரது இந்தப் பேட்டி ட்ரெண்டாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











