»   »  'பிச்சைக்காரன்' மூலம் தெலுங்கு மார்க்கெட்டை வலுவாகப் பிடித்த விஜய் ஆண்டனி!

'பிச்சைக்காரன்' மூலம் தெலுங்கு மார்க்கெட்டை வலுவாகப் பிடித்த விஜய் ஆண்டனி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் 'சைத்தான்' திரைப்படத்தின் தெலுங்கு உரிமை 2 கோடிக்கு விலை போயிருக்கிறது.

இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய விஜய் ஆண்டனி தற்போது முழு நேர நடிகராக உருவெடுத்துள்ளார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான 'பிச்சைக்காரன்' தமிழில் 15 கோடிகளை வசூலித்து சாதனை படைத்தது.


'பிச்சக்காடு' என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட இப்படம் 18 கோடிகளை தெலுங்கில் வசூலித்து புதிய சாதனையை படைத்தது.இதனால் விஜய் ஆண்டனியின் தெலுங்கு மார்க்கெட் ஒரேயடியாக உயர்ந்துள்ளது.


Saithan Telugu Remake sold Huge Amount

இதனால் அடுத்ததாக இவரின் நடிப்பில் உருவாகி வரும் 'சைத்தான்' படத்தின் தெலுங்கு உரிமையை, வேணு கோபால் என்னும் தெலுங்கு தயாரிப்பாளர் 2 கோடிகளை கொட்டிக் கொடுத்து வாங்கியிருக்கிறார்.


'நான்', 'சலீம்' வரிசையில் திரில்லர் படமாக உருவாகி வரும் சைத்தானை விஜய் ஆண்டனி சொந்தமாக தயாரித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக மீரா கிருஷ்ணன், அருந்ததி நாயர் இருவரும் நடித்து வருகின்றனர்.


பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கி வரும் இப்படத்திற்கு நாயகனான விஜய் ஆண்டனியே இசையமைத்து வருகிறார். வருகின்ற ஆகஸ்ட் மாதம் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


'பிச்சைக்காரன்' மூலம் தெலுங்கிலும் தனது மார்க்கெட் உயர்ந்திருப்பதால், விஜய் ஆண்டனி தற்போது எக்கசக்கமான மகிழ்ச்சியுடன் வலம்வருகிறார்.

English summary
Vijay Antoy's Saithan Telugu Remake Rights sold 2 Crores.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil