Don't Miss!
- News
அடடே சூப்பர்! பயன்பாட்டுக்கு வந்தது உலகின் முதல் நாசி வழி தடுப்பு மருந்து.. விலை எவ்வளவு தெரியுமா?
- Finance
பட்ஜெட் அல்வா நிகழ்ச்சி.. பட்ஜெட் பணிகள் முடிந்தது - நிர்மலா சீதாராமன்..!
- Sports
விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுத்த பாபர் அசாம்.. தோனி, கோலி லிஸிட்டில் பாபர்.. ஐசிசியின் கவுரவம்
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Technology
50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: பட்ஜெட் விலை.!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
அதிரடி ஆக்ஷனில் சாக்ஷி அகர்வால்!
திரையுலகில் வளர்ந்து வரும் கதாநாயகிகளில் குறிப்பிடத்தக்கவர் சாக்ஷி அகர்வால். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர், தற்போது 'நான் கடவுள் இல்லை 'என்கிற படத்தில் சிபிசிஐடி அதிகாரியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் சாக்ஷி அகர்வால் நடித்த ஒரு சண்டைக்காட்சி வடபழனியில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் அதாவது ஜிம்மில் நடந்தது. சண்டைக் காட்சியை ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் வடிவமைத்து இயக்கினார்.அதில் சாக்ஷி அகர்வால் டூப் போடாமல் பல ரிஸ்க்கான காட்சிகளில் நடித்ததைப் பார்த்து கனல் கண்ணன் பாராட்டி உள்ளார்.
இந்தப் படத்தை முழுவதுமாக படப்பிடிப்பு முடித்துவிட்டு. நான்கு சண்டைக் காட்சிகள் மட்டும் எடுக்கப்படாமல் வைத்து கடைசியாகப் படம் ஆக்கி இருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் சமுத்திரகனியின் கதாபாத்திரம் ஒரு கம்பீரமான இதுவரை திரையில் பார்க்காத ஒரு கதாபாத்திரமாக இருக்கும். இன்னொரு இளம் நாயகனாக யுவன் நடிக்கிறார். ராணுவ வீரராக நடிக்கும் இவர் இப்படத்திற்குப் பிறகு ஒரு சிறந்த ஆக்சன் ஹீரோவாக பேசப்படுவார் என்று இயக்குநர் எஸ் எஸ் சந்திரசேகர் கூறுகிறார். இந்தப் படத்தில் இனியா பாசமும் பரிதாபமும் கொண்ட தாயாகவும். பருத்திவீரன் சரவணன் வில்லன் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
பரபரப்பான படங்களுக்குப் பெயர் பெற்றவர் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் .'சட்டம் ஒரு இருட்டறை' படத்திலிருந்து தனது பரபரப்பைத் தொடங்கியவர் பல படங்களில் சட்டத்தை விளையாட வைத்தவர், இப்போது 'நான் கடவுள் இல்லை' படத்திலும் தொடர்கிறார் .அவரிடம் வந்த அந்த சக்தி இன்னும் குறையாமல் இருந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இந்தப் படம் சாட்சியாக இருக்கும்.
இப்படத்தின் குரல் பதிவு வேலைகள் முடிந்து இறுதிக்கட்டமாகப் பின்னணி சேர்க்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இப்படம் 2023 பிப்ரவரி மாதம் வெளியாகும் என் எதிர்பார்க்கப்படுகிறது.