»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

முன்பெல்லாம் திரைப்படங்கள் ஸ்டுடியோக்களில் மட்டுமே தயாராகி வந்தன. வெளிப்புறப் படப்பிடிப்பு என்பதெல்லாம் பெரிய விஷயம்.

புயலையும், சூறாவளியையும் ஸ்டுடியோவுக்குள்ளேயே கொண்டு வருவார்கள். நிலவு கூட வெள்ளை அட்டையில் கருப்புத் துணியின் பின்னணியில் ஒட்டப்பட்டு பாலைப்பொழிந்து கொண்டிருக்கும். மரங்களை ஆட்டி தென்றலை வரவழைப்பார்கள்.

இப்படியாக இருந்து கொண்டிருந்த காலத்தில், வெளிப்புறப் படப்பிடிப்பு என்ற ஒன்று வந்தது. கிராமங்களை அங்கேயே சென்று படம் பிடிக்க ஆரம்பித்தார்கள்.நிலவை வானிலேயே காட்டினர். மழை பெய்தபோது அதைப் படம் பிடித்தார்கள். புயல் அடித்தபோது இவர்களும் சூறாவளியாக சுழன்று படம்பிடித்தார்கள்.

வெளிப்புறப் படப்பிடிப்புகள் மூலம் திரைப்படங்களை மேலும் உயிரோட்டத்துடன் எடுக்க முடியும் என்ற நிலை வந்தபோது, ஸ்டுடியோக்களை விட்டுவெளியேற ஆரம்பித்தார்கள் படைப்பாளிகள். ஸ்டுடியோக்கள் காற்று வாங்க ஆரம்பித்தன. படப்பிடிப்புத் தளங்களின் இன்றைய நிலை மிகவும் பரிதாபமாகஉள்ளது.

வெளிப்புற படப்பிடிப்புகள் பிரபலமாக ஆரம்பித்த பின் சென்னையில் உள்ள ஸ்டுடியோக்கள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வந்தன. தற்போது சென்னையில்உள்ள பழம் பெரும் ஸ்டுடியோக்கள் இரண்டுதான். ஒன்று ஏ.வி.எம். மற்றொன்று விஜயா-வாஹினி ஸ்டுடியோ. இதில் விஜயா-வாஹினி ஸ்டுடியோஆசியாவிலேயே பெரியது என்ற பெயர் பெற்றது.

விஜயா-வாஹினி ஸ்டுடியோ தற்போது விலை பேசப்பட்டு வருகிறதாம். ரூ. 38 கோடிக்கு அதை பேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். 6 மாதத்திற்குள்இது விற்கப்பட்டு விடும் என்று தெரிகிறது.

விஜயாவைத் தொடர்ந்து சாலிக்கிராமம் பகுதியிலுள்ள மோகன் ஸ்டுடியோவும், குத்தகை காலம் முடிந்து தற்போது விற்பனைக் களத்திற்கு வந்துள்ளது.

ஏற்கனவே தென்னிந்தியாவின் ஹாலிவுட்டான கோடம்பாக்கத்தில் உள்ள பல ஸ்டுடியோக்கள் விற்கப்பட்டு அடுக்கு மாடிக் குடியிருப்புகளாக மாறிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல ஸ்டுடியோவான ஏ.வி.எம்மின் பல தளங்கள் தனியாருக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது என்பது பலருக்குத் தெரியாத சேதி!.

Read more about: cinema, film, rain, sale, tamil cinema, village

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil