Just In
- 5 min ago
சாருஹாசனுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’
- 13 min ago
மீண்டும் இணையும் திரில்லர் கூட்டணி.. 'ஏவி31' படப்பிடிப்பு ஆரம்பம்
- 22 min ago
'கில்லி'ல நடிச்சது...15 வருடத்துக்குப் பின் விஜய்யுடன் இணையும் நடிகர்!
- 13 hrs ago
உண்மையான ஹீரோ சொந்த சகோதரியை காயப்படுத்தி ஏமாற்ற மாட்டான்.. அருண்விஜய் மீது பாய்ந்த வனிதா!
Don't Miss!
- News
இந்தியாவைச் சேர்ந்த முஸ்லீம்கள் பயப்பட தேவையில்லை.. அமித்ஷா லோக்சபாவில் பேச்சு
- Finance
"வீடு, கார் முதல் சேர் வரை" அனைத்தும் வாடகைக்கு.. எங்கே போகிறது உலகம்..!
- Technology
ஒன்பிளஸ் டிவி மாடல்களுக்கு வழங்கப்பட்டுள்ள புத்தம் புதிய அம்சம்.!
- Lifestyle
இந்த ராசிக்காரர்களுக்குத் தான் சனிபகவான் நிறைய சோதனைகளைத் தருவார் தெரியுமா?
- Sports
ஏன் இப்படி பண்றீங்க? மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி!
- Automobiles
"வாகன துறையில் வேலையிழப்பே கிடையாது" - சர்ச்சை பதிலை கூறிய பாஜக தலைவர் யார் தெரியுமா..?
- Education
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அடாவடி ஐஸ்வர்யா ராஜேஷ்.. அமைதியான ஹீரோ.. சலீம் இயக்குனரின் தெலுங்கு மேட்ச்!
சென்னை: ஐஸ்வர்யா ராஜேஷ், அடாவடி பெண்ணாக நடிக்கும் படத்தை இயக்கி இருக்கிறார் 'சலீம்' நிர்மல்குமார்.
தமிழில் விஜய் ஆண்டனி நடித்த 'சலீம்' படத்தை இயக்கியவர் நிர்மல் குமார். அடுத்து அரவிந்த்சாமி, த்ரிஷா நடிப்பில்,'சதுரங்க வேட்டை' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கினார். இந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. இப்போது சரத்குமார், சசிகுமார் நடிக்கும் 'நா நா' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையே சத்தம் போடாமல், 'மிஸ் மேட்ச்'(Mis Match) என்ற தெலுங்கு படத்தை இயக்கி முடித்திருக்கிறார் நிர்மல் குமார். வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகிறது படம்.

''சலீம்'படத்தை ரீமேக் பண்ணலாம்னுதான் தெலுங்குக்கு போனேன். விஜய் ஆண்டனி கேரக்டர்ல, வெங்கடேஷ் நடிக்கிறதா இருந்தது. எல்லாம் ரெடியான நேரத்துல சில காரணங்களால் அந்தப் படம் தள்ளிப் போச்சு. பிறகுதான் 'மிஸ் மேட்ச்' வாய்ப்பு வந்தது' என்கிறார், நிர்மல் குமார்.
அரவிந்த் சாமிக்கு ஒரு விருது.. லிஜன்ட் ஆப் தி இந்தியன் சினிமா

'இந்தப் படத்துல கிராமத்துல இருந்து வர்ற அடாவடி பொண்ணுக்கும் அமைதியான பையன் ஒருத்தருக்கும் நடக்கிற காதல், மோதல், பயணத்தை கதையா சொல்றேன். அடாவடி பொண்ணா ஐஸ்வர்யா ராஜேஷ் நடிச்சிருக்கிறாங்க. சும்மாவே நடிப்புல மிரட்டுவாங்க. இதுல கேட்கவே வேண்டாம். ஆர்ப்பாட்டம் பண்ணியிருக்காங்க. அமைதியான பையனா, உதய சங்கர் நடிச்சிருக்கிறார். அவருக்கு இது இரண்டாவது படம். கிஃப்டன் இலியாஸ் இசை அமைச்சிருக்கிறார். 'சலீம்' கேமராமேன் கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு பண்ணியிருக்கார்.

தெலுங்கு ரிலீஸை அடுத்து இந்தப் படத்தை தமிழ்ல ரீமேக் பண்ற ஐடியாவும் இருக்கு'என்கிற நிர்மல் குமாரிடம், 'சதுரங்க வேட்டை 2' பற்றி கேட்டால், 'படத்தை முடிச்சுக் கொடுத்து ரொம்ப நாளாச்சு பாஸ். ரிலீஸ் பற்றி தயாரிப்பாளர் மனோ பாலாவுக்குத்தான் தெரியும்' என்கிறார், புன்னகைத்தபடி.