»   »  பாவனா கடத்தலில் திலீபுக்கு பங்குள்ளதா? பிரபல நடிகர் கருத்து

பாவனா கடத்தலில் திலீபுக்கு பங்குள்ளதா? பிரபல நடிகர் கருத்து

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாவனா கடத்தல் வழக்கில் நடிகர் திலீபுக்கு பங்கிருப்பதாக செய்தி பரவி வருகிறது. இதில் திலீப்புக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் திரையுலகினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிரபல நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் 17-ந்தேதி கொச்சிக்கு காரில் செல்லும் போது அவரை சிலர் கடத்தி பாலியல் தொல்லை செய்தனர்.

Salim Kumar supports Dileep in Bhavana case

இந்த வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி ரவுடி பல்சர் சுனில், பாவனாவின் கார் டிரைவர் மார்ட்டின் உள்பட 7 பேரை கைது செய்தனர். கைதான பல்சர் சுனில் ஜெயிலில் இருந்தபடி நடிகர் திலீபுக்கு கடிதம் மூலம் பணம் கேட்டு மிரட்டியதாக தகவல் வெளியானது. அந்தக் கடிதமும் வெளியானது.

அக்கடிதத்தில் இருந்தது பல்சர் சுனில் கையெழுத்து இல்லை என்பதை போலீசார் உறுதி செய்தனர். உடனே இதுகுறித்து போலீசாரிடம் புகார் செய்த நடிகர் திலீப் இயக்குநர் நாதிர்ஷா, திலீப்பின் மானேஜர் ஆகியோரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.

இந்த நிலையில் திலீப்பை ஆதரித்து மலையாள காமெடி நடிகர் சலீம்குமார் பேஸ்புக்கில் தெரிவித்துள்ள கருத்து:

நடிகை கடத்தல் விவகாரம் தொடர்பாக இப்போது வெளியாகி வரும் தகவல்கள் நடிகர் திலீப்பின் தனிப்பட்ட வாழ்க்கையை சீர்குலைக்க நடக்கும் முயற்சிகளாகும். இந்த கதைக்கு யாரோ திரைக்கதை எழுதுகிறார்கள். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கதைக்கு கிளைமாக்ஸ் எழுதப்பட்டது. அதன்படி 2013-ம் ஆண்டு கதையில் முக்கிய ட்விஸ்ட் ஏற்பட்டது. அது திலீப்- மஞ்சுவாரியர் விவகாரத்து முடிந்தது. இப்போது நடிகை கடத்தப்பட்ட விவகாரம் கிளம்பி உள்ளது.

திலீப் குற்றவாளி என்றால் அவரை சட்டம் பார்த்துக் கொள்ளும். ஆனால் இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் மற்றும் நடிகை பாவனா ஆகியோரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும். இதன் மூலம் உண்மை வெளிப்படும்.

-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

English summary
Malayalam actor Salim Kumar has supported actor Dileep in Bhavana issue.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil