»   »  சல்மான் கானுக்கும் தீபிகாவுக்கும் இதுதான் முதல்முறையாம்!

சல்மான் கானுக்கும் தீபிகாவுக்கும் இதுதான் முதல்முறையாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : கடந்த 2009-ம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி ஹிட் அடித்த படம் 'கிக்'. இந்தப் படம் தமிழிலும் தில்லாலங்கடி எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியானது. இந்தப் படம் பாலிவுட்டிலும் ரீமேக் செய்யப்பட்டது.

'கிக்' படம் பாலிவுட்டில் சல்மான் கான் - ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் ஆகியோரின் நடிப்பில் 2014-ம் ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட் ஆனது. ஷாருக்கானின் 'ஹேப்பி நியூ இயர்' படத்தை வசூலில் பின்னுக்குத் தள்ளிய இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது.

Salman and deepika padukone will first time pair in new film

'கிக் -2'விலும் சல்மான் கானே ஹீரோவாக நடிக்க உள்ளார். ஆனால், ஹீரோயினாக ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுக்குப் பதிலாக தீபிகா படுகோனேவை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

தீபிகா படுகோனே இந்தப் படத்தில் நடிக்கவிருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. சல்மான் கானும் தீபிகா படுகோனேவும் முதன்முறையாக இந்தப் படத்தின் மூலம் இணைந்து நடிக்க இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
'Kick' released in Bollywood with Salman Khan and Jacqueline Fernandez's performance. . Salman Khan Deepika Padukone will act in the movie 'Kick -2'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil