»   »  யாராக இருந்தால் எனக்கென்ன: காதலிக்கே 'நோ' சொன்ன ஹீரோ

யாராக இருந்தால் எனக்கென்ன: காதலிக்கே 'நோ' சொன்ன ஹீரோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தனது காதலி கத்ரீனாவாக இருந்தாலும் சரி முத்தக் கொள்கையை தளர்த்த மாட்டேன் என்று சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடித்து வரும் படம் டைகர் ஜிந்தா ஹை. இது ஏக் தா டைகர் படத்தின் இரண்டாம் பாகம் ஆகும்.

காதலர் ரன்பீர் கபூரை பிரிந்த கத்ரீனா தனது முன்னாள் காதலரான சல்மானிடமே திரும்பி வந்துவிட்டார். அவர்களுக்கு இடையே தற்போது நெருக்கம் அதிகரித்துள்ளதாக பாலிவுட்டில் பேசப்படுகிறது.

முத்தம்

முத்தம்

பாலிவுட்டில் லிப் டூ லிப் எல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்ட நிலையில் சல்மானோ தனது படங்களில் ஹீரோயினுக்கு முத்தம் கொடுக்கும் காட்சிகளில் நடிப்பது இல்லை.

நெருக்கம்

நெருக்கம்

படுக்கயறை காட்சிகளிலும் சல்மான் கான் நடிப்பது இல்லை. அவர் ஒப்பந்தமாகியுள்ள ரேஸ் 3 படத்தில் வைக்கப்பட்ட நெருக்கமான காட்சிகளை நீக்கச் சொல்லிவிட்டார்.

கத்ரீனா

கத்ரீனா

கத்ரீனா தனது காதலி என்பதால் டைகர் ஜிந்தா ஹை படத்தின் முத்தக் காட்சியில் சல்மான் நடிப்பார் என்று எதிர்பார்த்தார்கள். அவரோ யாராக இருந்தாலும் சரி நான் முத்தக் காட்சியில் நடிக்க மாட்டேன் என்று கறாராக தெரிவித்துவிட்டார்.

அசவுகரியம்

அசவுகரியம்

நெருக்கமான காட்சிகளில் சல்மான் நடித்து அதை அவர் அம்மா சல்மா பார்த்தால் அசவுகரியமாக இருக்கும் என்பதால் அவர் நடிக்க மறுக்கிறாராம். சல்மான் கானுக்கு அம்மா மீது பாசம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Salman Khan is not ready to act in kissing scene even if it involves his alleged girl friend Katrina Kaif.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X