»   »  பார்ட்டியில் மோதிக் கொண்ட கான் நடிகர்கள்

பார்ட்டியில் மோதிக் கொண்ட கான் நடிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பை பாந்த்ரா நகரின் குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சமீபத்தில் நடந்த ஒரு பார்ட்டியில் பாலிவுட்டின் மிகப்பெரிய நடிகர்களான சல்மான்கான் மற்றும் அமீர்கான் இடையே சண்டை நடந்தததாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

நல்லபடியாக சென்றுகொண்டிருந்த இந்தப் பார்ட்டி இருவரின் சண்டையால் இடையிலேயே நின்று விட்டதாகவும், இந்த சண்டையினால் இருவரின் இடையே உள்ள நட்பு முறிந்து விட்டதாகவும் கூறுகின்றனர்.

இந்த விவகாரம் தற்போது பாலிவுட்டில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது.

பாலிவுட்

பாலிவுட்

இந்திய சினிமாவில் முக்கியமான பகுதியாக விளங்கும் பாலிவுட்டில் சல்மான் கான், ஷாருக்கான் மற்றும் அமீர்கான் ஆகியோரின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கும். படத்தின் மூலம் போட்டியிட்டாலும், இந்த மூவருக்கும் இடையே நல்ல ஒரு நட்பும் கூட இருந்து வந்தது. சில மாதங்களுக்கு முன்னர் தங்கள் ரசிகர்கள் யாரும் தங்களை காரணமாக வைத்து சண்டையிடக் கூடாது என்று சல்மான் கான் கூறியிருந்தார்.

சண்டையில் முடிந்த பார்ட்டி

சண்டையில் முடிந்த பார்ட்டி

இந்நிலையில் கடந்த வாரம் மும்பை பாந்த்ரா நகரில் நடந்த ஒரு பார்ட்டியில் சல்மான் கானும், அமீர்கானும் கலந்து கொண்டிருக்கின்றனர். நன்றாகப் போய்க் கொண்டிருந்த பார்ட்டி இவர்கள் இருவரின் சண்டையின் காரணமாக முடிவுக்கு வந்திருக்கிறது. மேலும் இருவரின் நட்பும் கூட முறிந்து போய்விட்டதாக கூறுகின்றனர்.

அமீரின் பேச்சு

அமீரின் பேச்சு

நடிகர் அமீர்கான் சல்மான் கானிடம் சமீபத்தில் அவரின் நடிப்பில் வெளியான பஜ்ரங்கி பைஜான் படம் நன்றாக இருந்தது, தொடர்ந்து இதே மாதிரி படங்களை ஏற்று செய்யுங்கள். உங்கள் வயதுக்கேற்ற பாத்திரங்களை ஏற்று நடியுங்கள் என்று கூறினாராம்.

கோபம்கொண்ட சல்மான்

கோபம்கொண்ட சல்மான்

அமீரின் இந்தப் பேச்சு சல்மானிற்கு கோபத்தை ஏற்படுத்த உங்களைப் போல எனக்கு கடின உழைப்பு இல்லைதான். ஆனால் நீங்கள் முதலில் உங்களை வைத்து நல்ல படங்களை இயக்கிய தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களை அவ்வப்போது பாராட்டினால் உங்களுக்கு நல்லதாக அமையும் என்று பதிலுக்கு கத்தினார் என்று கூறுகிறார்கள். மேலும் போலி என்னும் அர்த்தம் வரும் (Fake) பேக் என்ற வார்த்தையை உபயோகித்ததாகவும் கூறுகின்றனர்.

முறிந்து போன நட்பு

முறிந்து போன நட்பு

இதனால் இதுவரை நல்லபடியாகப் போய்க்கொண்டிருந்த இருவரின் நட்பும் உடனே முடிவுக்கு வந்து விட்டதாம். பார்ட்டியில் நடந்த சண்டையில் இருவரையும் சமாதானப்படுத்தி சண்டையை முடித்து வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டதாம்.

காரணம் என்ன

காரணம் என்ன

சுல்தான் படத்தில் சல்மான் விளையாட்டு வீரராக நடிக்கவிருக்கிறார், ஏற்கனவே டங்கால் படத்தில் அமீர் விளையாட்டு வீரராக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் இருவருக்கும் இடையே சண்டை நிகழ்ந்ததாக கூறுகின்றனர். கடந்த 2008ம் ஆண்டில் சல்மான் கான் மற்றும் ஷாருக்கான் இருவருக்கும் இடையே இதேபோன்று சண்டை நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Aamir Khan and Salman Khan having an ugly fight at Aamir’s party recently. Now the Bollywood Big Stars Friendship is Ended.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil