»   »  அனுஷ்கா- விராட் கோலி காதலை 'புதுப்பித்த' சல்மான் கான்?

அனுஷ்கா- விராட் கோலி காதலை 'புதுப்பித்த' சல்மான் கான்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: அனுஷ்கா சர்மா -விராட் கோலி மீண்டும் தங்கள் காதலை புதுப்பித்ததற்கு, சல்மான் கான் தான் காரணம் எனப் புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சல்மான் ஒரு காதல் மன்னன் என்றுதானே கேள்விப் பட்டிருக்கிறோம் இதென்ன புதுக்கதை என்று ஆச்சரியமாக உள்ளதா? உங்களால் நம்ப முடியாவிட்டாலும் அதுதான் உண்மை என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Salman Khan advice for Sultan Actress

அனுஷ்கா தன்னை விட்டுப் பிரிந்து சென்றபின் பல வழிகளிலும் தங்களது காதலை மீண்டும் புதுப்பிக்க விராட் கோலி முயற்சி செய்தார். ஆனால் அவை அனைத்துமே கிணற்றில் போட்ட கல்லாகி விட்டன.

இதனால் சோகமாக வலம்வந்த விராட் கோலியை தற்போது மீண்டும் ஒருசில கண்டிஷன்களுடன் அனுஷ்கா ஏற்றுக் கொண்டிருக்கிறார். இதில் சுவாரசியம் என்னவென்றால் இவர்கள் காதலை பிரித்ததாகக் கூறப்பட்ட சல்மான் தான் இருவரின் காதலையும் புதுப்பித்து வைத்தாராம்.

சுல்தான் படத்தின் ஹங்கேரியா படப்பிடிப்பில் அனுஷ்காவிற்கு, சல்மான் சிலபல அறிவுரைகளை சொல்லியிருக்கிறார். அதில் முக்கியமானது ''உனது காதல் உண்மையாக இருந்தால் அதனை மீண்டும் தொடர்வாயாக'' என அனுஷ்காவிடம், சல்மான் கூறியது தானாம்.

இதனால் அனுஷ்கா- விராட் காதல் தொடர்வதற்கு வேறு காரணங்கள் இருந்தாலும், சல்மான் தான் முக்கியக் காரணம் என பாலிவுட் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விராட் -சல்மான் நண்பர்களாக இல்லாவிட்டாலும் கூட, சல்மான் மீது அனுஷ்காவிற்கு மிகப்பெரிய மரியாதை இருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sources said Salman Khan is the Main Reason for Anushka Sharma - Virat Kohli's Second Love.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil