twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தியேட்டர் உரிமையாளர்களிடம் மன்னிப்பு கேட்ட சல்மான் கான்... ஏன்னு தெரியுமா

    |

    மும்பை : கொரோனா முதல் அலையின் போது அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கின் போது நாடு முழுவதும் மூடப்பட்ட தியேட்டர்கள் 8 மாதங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு நவம்பரில் தான் திறக்கப்பட்டன. தற்போது கொரோனா இரண்டாம் காரணமாக மீண்டும் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் தியேட்டர்கள் மற்றும் அதை நம்பிய பல தொழில்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளன.

    கணவருடன்.... மகனுடன்... புகைப்படம் வெளியிட்டு மகிழ்ந்த மேக்னா... கூட இருக்கறது யாரு? கணவருடன்.... மகனுடன்... புகைப்படம் வெளியிட்டு மகிழ்ந்த மேக்னா... கூட இருக்கறது யாரு?

    முதல் அலையின் போது ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்வதற்காக சல்மான் கான் நடித்த ராதே : யுவர் மோஸ்ட் வான்டட் பாய் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய வேண்டும் என தியேட்டர் உரிமையாளர்கள் சல்மான் கானிடம் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று சல்மான் கானும் தனது படத்தை தியேட்டரிலேயே ரிலீஸ் செய்வதாக உறுதி அளித்தார்.

    ஓடிடி.,யில் ரிலீசாகும் ராதே

    ஓடிடி.,யில் ரிலீசாகும் ராதே

    ஆனால் கொரோனா இரண்டாம் அலை காரணமாக மீண்டும் தியேட்டர்கள் மூடப்பட்டதாலும், தியேட்டர்களுக்கு வர மக்கள் தயக்கம் காட்டுவார்கள் என்பதாலும் தற்போது ராதே படத்தை தியேட்டர் மற்றும் ஓடிடி தளத்திலும், ஜீ பேயிலும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். ரம்ஜானை முன்னிட்டு இப்படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

    மன்னிப்பு கேட்ட சல்மான் கான்

    மன்னிப்பு கேட்ட சல்மான் கான்

    தற்போதுள்ள நோய் தொற்று பரவல் காலத்தில் தியேட்டரில் மட்டும் படத்தை ரிலீஸ் செய்தால் மிகப் பெரிய நஷ்டத்தை சந்திக்க வேண்டும் என்பதால் இந்த முடிவை சல்மான் கான் எடுத்துள்ளார். இதற்காக நாடு முழுவதிலும் உள்ள தியேட்டர் உரிமையாளர்களிடம் சல்மான் கான் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

    படத்தை ரிலீஸ் செய்வது முக்கியம்

    படத்தை ரிலீஸ் செய்வது முக்கியம்

    ஆன்லைனில் சல்மான் கான் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ஜீ நிறுவனத்தின் உதவியில்லாமல் ரம்ஜானிற்கு ரசிகர்களை என்னால் திருப்திப்படுத்த முடியாது. இந்த சமயத்தில் படத்தை ரிலீஸ் செய்வது மிக முக்கியம். ஏனெனின் நோய் தொற்ற காலத்தில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மக்களுக்கு வருமானமில்லை

    மக்களுக்கு வருமானமில்லை

    பலரின் வருமானம் குறைந்து விட்டது. அதனால் மக்கள் பலரால் அதிக விலைக்கு டிக்கெட் வாங்கி படம் பார்க்க முடியாது. அதற்க பதிலாக மளிவான விலையில் வீட்டில் இருந்தே படங்களை பார்க்க முடியும். இந்த இக்கட்டான நிலையில் மக்களுக்கு இது போன்ற விஷயங்களை தந்து பொழுபோக்க நினைக்கிறேன்.

    விளக்கம் கொடுத்த சல்மான் கான்

    விளக்கம் கொடுத்த சல்மான் கான்

    இந்த படத்தின் ரிலீசின் மூலம் லாபம் சம்பாதிக்கலாம் என நம்பிக்கையடன் இருந்த சினிமா தியேட்டர் உரிமையாளர்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். எங்களால் முடிந்த அளவிற்கு நீண்ட காலம் காத்திருந்து விட்டோம். கொரோனா சரியான பிறகு தியேட்டரில் படத்தை ரிலீஸ் செய்யவே நினைத்திருந்தோம். ஆனால் அது நடக்கவில்லை. இந்த நிலை மாறி சகஜ நிலை எப்போது வரும் என நமக்கு தெரியாது என்றார் சல்மான் கான்.

    English summary
    salman khan said that he would apologise to cinema owners who were hoping to earn profits with the release of this film.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X