»   »  பாடிகார்டுகள், பிரமாண்ட பார்ட்டி: சஞ்சய் தத்தை ராஜா போன்று வரவேற்கும் சல்மான் கான்

பாடிகார்டுகள், பிரமாண்ட பார்ட்டி: சஞ்சய் தத்தை ராஜா போன்று வரவேற்கும் சல்மான் கான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சிறையில் இருந்து விடுதலையான நடிகர் சஞ்சய் தத்திற்கு சல்மான் கான் தனது பண்ணை வீட்டில் பிரமாண்டமான பார்ட்டி கொடுக்கிறார்.

சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் புனேவில் உள்ள ஏர்வாடா சிறையில் இருந்து இன்று விடுதலை செய்யப்பட்டார். தனி விமானம் மூலம் அவர் மும்பை வந்தார்.

அவரை பத்திரமாக அழைத்துச் சென்று வீட்டில் விட சல்மான் கான் 4 பாதுகாவலர்களை விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்தார். சஞ்சய் தத் சித்திவிநாயகர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

Salman Khan arranges bash at Panvel farmhouse for Sanjay Dutt

அவர் தனது குடும்பத்தாருடன் மும்பை பான்வெல் பகுதியில் உள்ள சல்மான் கானின் பண்ணை வீட்டிற்கு செல்கிறார். பண்ணை வீட்டில் சஞ்சய் தத்தை வரவேற்க சல்மான் பிரமாண்ட பார்ட்டி கொடுக்கிறார்.

சஞ்சய் சில நாட்கள் சல்மானின் பண்ணை வீட்டில் தங்கி ஓய்வு எடுக்க உள்ளார். சஞ்சய் வருகையையொட்டி சல்மான் தனது பண்ணை வீட்டுப் பக்கம் பத்திரிக்கையாளர்கள் வராமல் பார்த்துக் கொண்டுள்ளார்.

சல்மானும், சஞ்சய் தத்தும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Sanjay Dutt who got released from Pune prison is going to relax at Salman Khan's Panvel farmhouse. Salman has arranged for a party at the farm house to welcome him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil