»   »  மீண்டும் சர்ச்சையில் சல்மான்!

மீண்டும் சர்ச்சையில் சல்மான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Click here for more images
சர்ச்சை நாயகன் சல்மான் கான் மீண்டும் ஒரு புது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ஐஸ்வர்யா ராயை துரத்தி துரத்தி வெறித்தனமாக காதலித்தது, மான் வேட்டையாடி கைதானது, குடிபோதையில் பிளாட்பாரத்தில் காரை ஓட்டி ஒருவரைக் கொன்றது என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர் சல்மான் கான்.

இந்த நிலையில் புதிதாக ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் சல்மான் கான்.

மும்பையில் நேற்று காலை வெளிநாட்டு மாடல் அழகி ஒருவருடன் காரில் சென்றுள்ளார் சல்மான். காரை அந்த அழகி தான் ஓட்டினாராம்.

கார் மும்பையின் வொர்லி பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது, திடீரென கார் தாறுமாறாக ஓடியது. முன்னால் போய்க் கொண்டிருந்த போலீஸ்காரர் மீது மோதி நின்றது. பைக்கில் இருந்தவர் ஒரு போலீஸ்காரர்.

காரைத் தாறுமாறாக ஓட்டியதோடு நில்லாமல், காரிலிருந்த இறங்கிய அந்த மாடல் அழகி, போலீஸ்காரரை சரமாரியாக திட்டியுள்ளார். இதைப் பார்த்து போலீஸ்காரர் அதிர்ந்து விட்டார்.

இந்த நிலையில் காரை விட்டு இறங்கிய சல்மான் கானைப் பார்த்தவுடன் இவராவது நம்மைக் காப்பாற்றுவார் என்று அவரிடம் காரை தாறுமாறாக ஓட்டி விட்டு திட்டவும் செய்கிறார் பாருங்கள் என்று அந்தப் பெண் மீது சல்மானிடம் கூறியுள்ளார்.

ஆனால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக, நீங்கள்தான் சரியாக பைக் ஓட்டிச் செல்லவில்லை என்று சல்மான் கூறியுள்ளார். கடுப்பாகிப் போன போலீஸ்காரர் சத்தம் போட்டு ஊரைக் கூட்டி விட்டார்.

பெரும் கூட்டம் கூடி சல்மான், போலீஸ்காரர் இடையிலான பஞ்சாயத்தை வேடிக்கை பார்த்துள்ளனர்.

தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர். வெளிநாட்டு மாடல் என்பதால் அவரிடம் சர்வதேச லைசென்ஸ் இருந்ததாம். பின்னர் போலீசார் சல்மான்கானையும், அவருடன் வந்த மாடலையும் பத்திரமாக வழியனுப்பி வைத்தனராம்.

அந்த மாடல் அழகி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பவராம். அவருடன் சல்மான்கான் தனியாக எங்கு, எதற்காக சென்றார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Read more about: deer hunt model actress salmankhan

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil