»   »  இது ஒரு நல்ல கேள்வி: செய்தியாளர்களுக்கு அல்வா கொடுத்த சல்மான் கான்

இது ஒரு நல்ல கேள்வி: செய்தியாளர்களுக்கு அல்வா கொடுத்த சல்மான் கான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கானிடம் முன்னாள் காதலி ஐஸ்வர்யா ராய் பச்சன் பற்றி கேட்டதற்கு கைதட்டிவிட்டு சென்றுவிட்டார்.

பாலிவுட் நடிகர் சல்மான் கான் வாழ்வில் வந்து செல்கின்ற காதலிகளின் எண்ணிக்கை ஏராளம். சல்மான் கானும், ஐஸ்வர்யா ராயும் ஒரு காலத்தில் காதலர்களாக இருந்தது அனைவருக்கும் தெரியும். ஐஸ் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கும் தாயாகிவிட்டார்.

இருப்பினும் இன்னும் சல்மான் கானிடம் ஐஸ் பற்றி கேட்கப்படுகிறது.

பிக் பாஸ்

பிக் பாஸ்

பிக் பாஸ் டிவி ரியாலிட்டி ஷோவின் 9வது சீசனை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் சல்மான் கான் கலந்து கொண்டு செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய் தனது ஐஸ்பா படத்தை பிக் பாஸ் நிகழ்ச்சியில் விளம்பரம் செய்வாரா என்று சல்மானிடம் கேட்கப்பட்டது. சல்மான் என்ன பதில் அளிக்கப் போகிறார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.

கைதட்டல்

கைதட்டல்

பி.ஆர். என்னிடம் இருந்து மைக்கை திரும்பப் பெறும் முன்பு இந்த கேள்வியை கடைசியாக கேட்டிருக்க வேண்டும். எமோஷனல் கேள்வியை கேட்டுள்ளீர்கள். கைதட்டல்கள் என்று கூறி கையைதட்டிவிட்டு டாட்டா காட்டிவிட்டார் சல்மான்.

சல்மான் கான்

சல்மான் கான்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனை அவர் நடத்துவார், இவர் நடத்துவார் என்று பலரின் பெயர் அடிபட்டது. இறுதியில் நிகழ்ச்சியை நடத்தப் போவது சல்மான் கான் தான், வேறும் யாரும் இல்லை என்பது உறுதியாகிவிட்டது.

English summary
Bollywood actor Salman Khan has dodged the question on his former girl friend Aishwarya Rai at an event.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil