»   »  2.0 விழாவுக்கு சல்மான் அழைக்காமல் வந்ததற்கு ரஜினி அல்ல 'காதலி' ஏமி காரணமாம்?

2.0 விழாவுக்கு சல்மான் அழைக்காமல் வந்ததற்கு ரஜினி அல்ல 'காதலி' ஏமி காரணமாம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கானும், நடிகை ஏமி ஜாக்சனும் காதலிப்பதாக பேச்சாக கிடக்கிறது.

பாலிவுட் நடிகர் சல்மான் கான் ரோமானியாவை சேர்ந்த நடிகை லூலியா வந்தூரை காதலித்து வந்தார். இருவரும் இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் சல்மானும், லூலியாவும் பிரிந்துவிட்டார்கள்.

கும்பல்

கும்பல்

சல்மானை பிரிந்த செய்தியை லூலியா தனது நாட்டு பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். ஒரு வீட்டில் கும்பலாக குடும்பத்துடன் வாழ்கிறார்கள், தனிமையே இல்லை என அவர் சல்மான் வீட்டை பற்றி கூறியிருந்தார்.

ஏமி

ஏமி

லூலியாவை பிரிந்த சல்மான் கானுக்கு புது ஜோடி கிடைத்தாகிவிட்டதாம். சல்மானும், இங்கிலாந்தை சேர்ந்த நடிகை ஏமி ஜாக்சனும் காதலிப்பதாக பாலிவுட்டில் பேச்சாக கிடக்கிறது.

ஃப்ரீக்கி அலி

ஃப்ரீக்கி அலி

சல்மான் கானின் தம்பி சொஹைல் கான் இயக்குனர் அவதாரம் எடுத்த ஃப்ரீக்கி அலி படத்தின் நாயகி ஏமி ஜாக்சன். அந்த படத்தில் நடிக்கும்போது சல்மானுக்கும், ஏமிக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதாம்.

2.0 விழா

2.0 விழா

மும்பையில் நடந்த ரஜினிகாந்தின் 2.0 பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவுக்கு அழைக்காமலேயே வந்திருந்தார் சல்மான் கான். ரஜினி சார் எனக்கு மிகவும் பிடிக்கும் அவரை பார்க்கவே அழைப்பில்லாமல் வந்தேன் என்றார்.

சல்மான்

சல்மான்

சல்மான் கானாவது அழைக்காமல் விழாவுக்கு வருவதாவது என்று பாலிவுட் வியக்க அவர் அங்கு சென்றதற்கு ஏமி ஜாக்சன் காரணமாம். 2.0 நாயகி தனது காதலி என்பதால் அவருக்காக வந்தாராம் சல்மான். ஏமிக்காக மட்டும் அல்ல ரஜினிக்காகவும் தானாம்.

English summary
Buzz is that Bollywood Sultan Salman Khan is dating British actress Amy Jackson.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil