twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மான் வேட்டை வழக்கை இழுத்தடிக்கும் சல்மான் கான் - உயிருக்கு அச்சுறுத்தலாம்

    |

    Recommended Video

    மான் வேட்டை வழக்கை இழுத்தடிக்கும் சல்மான் கான் - உயிருக்கு அச்சுறுத்தலாம்

    சென்னை: மான் வேட்டையில் சிக்கிய நடிகர் சல்மான கான் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதால் நீதிமன்றத்திற்கு வரமுடியவில்லை என்று கூறியுள்ளார். அவருடைய வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றமும் வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. அண்மையில் சமூக ஊடகங்களில் சல்மான் கானுக்கு அச்சுறுத்தல்களை விடுத்து மிரட்டி வருகிறார் SOPU கும்பலின் ஒருவரான லாரன்ஸ் விஷனாய். இந்த காரணங்களால் அவரால் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என்று தெரிவித்தார் அவரது வழக்கறிஞர்.

    இருபது ஆண்டுகளுக்கு முன் மான் வேட்டையாடிய வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. நீண்டு வந்த இந்த வழக்கின் விசாரணைக்கு சல்மான் கான் செப்டம்பர் 27ஆம் தேதி ஜோத்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

    Salman Khan Deer hunting case Adjourned to December 19

    ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கடந்த 1998ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி ஹம் சாத் சாத் ஹைன் படத்தின் படப்பிடிப்பு போது அன்று இரவு படத்தின் நடிகர்கள் சல்மான் கான், தபு, சைஃப் அலிகான், சோனாலி பிந்த்ரே மற்றும் நீலம் ஆகியோர் ஜிப்சியில் சென்று கொண்டிருந்த போது அந்த சம்பவம் நடைபெற்றது.

    அப்போது அங்கு இருந்த இரண்டு பிளாக்பக்ஸ் எனும் அரிய வகை மான்களை சல்மான் கான் சுட்டுள்ளார். அங்கு பிஷ்னாயிஸ் என்று அழைக்கப்படும் ஒரு பாரம்பரிய சமூகம் அழிந்து வரும் விலங்கு இனங்களை விழிப்புடன் இருந்து வேட்டையாடுபவர்களிடம் இருந்து காப்பாற்றி வருகின்றனர். அந்த சமயத்தில் துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதும் ஜிப்சியைத் துரத்தி சென்ற கிராம மக்களால் தப்பி ஓடிய நடிகர்களை பிடிக்க இயலவில்லை. மான்களின் சடலத்தை அப்படியே போட்டு விட்டு ஓடிவிட்டனர்.

    இந்த சம்பவத்தை அடுத்து கிராமவாசிகளின் புகாரின் பேரில் சல்மான் கான் மீது இரண்டு வழக்குகள் தொடரப்பட்டன. ஒன்று ஆயுதச் சட்டத்தின் கீழ் விலங்குகளை வேட்டையாடியதற்காகவும், வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம் 1972ன் கீழ் ஆபத்தான விலங்குகள் பட்டியலின் கீழ் பிளாக்பக்ஸ் விலங்கினமும் சேரும். அதனை வேட்டையாடியதால் கிரிமினல் சட்டத்தின் படி அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

    இந்த வழக்கு கடந்த இருபது ஆண்டுகளாக நீட்டிக்கொண்டிருந்த நிலையில் 1998, 2006, 2007 என மொத்தம் 18 நாட்கள் மத்திய சிறையில் சல்மான் கான் ஜோத்புரில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. அவருடன் இருந்த மற்ற நான்கு நடிகர்களும் விடுவிக்கப்பட்டனர். 3 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளதால் அவர் மேல் நீதிமன்றத்தில் முறையிட்டு அவரால் ஜாமின் பெறமுடியும் என்பதால் அவர் ஜாமினில் வெளிவந்தார்.

    இந்த வழக்கு தொடர்பாக அவர் ஜோத்பூர் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராக வேண்டியிருந்தது. ஆனால் சல்மான் கான் நீதி மன்றத்தில் ஆஜராகவில்லை. அவரது வழக்கறிஞரான மகேஷ் போரா இது குறித்து தெரிவிக்கையில் சல்மான் கான் தனது பிஸியான கால அட்டவணையால் அவரால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என்று தெரிவித்தார்.

    மேலும் அண்மையில் சமூக ஊடகங்களில் சல்மான் கானுக்கு அச்சுறுத்தல்களை விடுத்து மிரட்டி வருகிறார் SOPU கும்பலின் ஒருவரான லாரன்ஸ் விஷனாய். இந்த காரணங்களால் அவரால் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என்று தெரிவித்தார் அவரது வழக்கறிஞர்.

    சல்மான் கானின் இந்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, டிசம்பர் 19ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர். ஜூலை 4ஆம் தேதி நடத்தப்பட்ட இறுதி விசாரணையின் போதும் சல்மான் கான் ஆஜராகாததால் செப்டம்பர் 27ஆம் தேதி ஆஜராகவேண்டும் என்று கடுமையாக உத்தரவிட்ட போதும் வெள்ளிக்கிழமை சல்மான் கான் ஆஜராகாமல் தவிர்த்து விட்டார். இதனால் வழக்கு விசாரணை வரும் டிசம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actor Salman Khan, who was caught on Blackbuck Deer hunting, said he was unable to get to court because he was threatened. The court accepted his argument and adjourned the case to December 19.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X