»   »  சூப்பர் ஸ்டாருக்கு, வீடு வாங்க காசு இல்லையாம்: நம்புற மாதிரியா இருக்கு?

சூப்பர் ஸ்டாருக்கு, வீடு வாங்க காசு இல்லையாம்: நம்புற மாதிரியா இருக்கு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: வீடு வாங்க தன்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்துள்ளார் சல்மான் கான்.

பாலிவுட்டின் மூன்று பிரபலமான கான்களான ஷாருக்கான், சல்மான் கான், ஆமீர் கானிடம் காசு கொட்டிக் கிடக்கிறது என்கிறார்கள். ஆனால் சல்மான் கானோ வேறு விதமாக தெரிவித்துள்ளார்.

பணம் பற்றி சல்மான் கூறியதை கேட்டு பலருக்கும் அதிர்ச்சியாக உள்ளது.

சம்பளம்

சம்பளம்

அதிகம் சம்பளம் வாங்கும் இந்திய நடிகர்கள் 100 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது போர்ப்ஸ் பத்திரிகை. அந்த பட்டியலில் சல்மான் கான் பெயர் இருந்தது.

பணம்

பணம்

போர்ப்ஸ் பட்டியலில் இடம் பிடித்த சல்மான் ஒரு வீடு வாங்க தன்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்துள்ளார். விரும்பியதை வாங்க பணம் இல்லாத நம் பெயர் போர்ப்ஸ் பட்டியலில் வந்துள்ளதே என்று நானும், ஷாருக்கானும் பேசிக் கொண்டிருந்தோம் என்கிறார் சல்மான்.

வீடு

வீடு

முன்பு வீடு வாங்க நினைத்தபோது சில லட்ச ரூபாய் பற்றாக்குறையாக இருந்தது. தற்போதோ சில கோடி ரூபாய் பற்றாக்குறையாக உள்ளது. அதனால் வீடு வாங்கும் கனவு கனவாகவே உள்ளது என்று சல்மான் கூறியுள்ளார்.

படங்கள்

படங்கள்

ஒரு படம் ரூ. 500 கோடி வசூலித்தால் அதில் குறைந்த அளவே எங்களுக்கு கிடைக்கும். பீயிங் ஹ்யூமன் உடைகள் விற்பனையில் இருந்து எங்களுக்கு கிடைக்கும் பணத்தில் வரியை கட்டிவிட்டு மீதமுள்ள தொகையை பீயிங் ஹ்யூமனுக்கே பயன்படுத்துகிறோம் என்கிறார் சல்மான்.

English summary
Not so long ago, Salman Khan was named as one of the highest paid Indian actors in Forbes top 100 list. But you will be shocked to know what the actor said about it. Salman Khan revealed that he can't even afford to buy a house with the money he earns.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil