»   »  சல்மான் கான் முகத்தில் ஓங்கிக் குத்திய தனுஷின் தோழி

சல்மான் கான் முகத்தில் ஓங்கிக் குத்திய தனுஷின் தோழி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பிரேம் ரத்தன் தான் பாயோ படத்திற்காக சல்மான் கான் முகத்தில் ஓங்கி குத்தியுள்ளார் நடிகை ஸ்வரா பாஸ்கர்.

சூரஜ் பர்தாஜ்யா இயக்கத்தில் சல்மான் கான், சோனம் கபூர் நடித்து வரும் படம் பிரேம் ரத்தன் தான் பாயோ. இந்த படத்தில் சல்மான் கானி தங்கையாக நடித்து வருகிறார் ஸ்வரா பாஸ்கர். ராஞ்ஹனா படத்தில் தனுஷை ஒரு தலையாக காதலித்தவர் தான் இந்த ஸ்வரா. படத்தில் தனுஷின் நெருங்கிய தோழியாகவும் நடித்திருந்தார்.

சூரஜ், சல்மான் வெற்றிக் கூட்டணியில் உருவாகும் இந்த படமும் வெற்றி பெறும் என்று நம்பப்படுகிறது.

குத்து

குத்து

படத்தில் அண்ணன் சல்மானுக்கும், தங்கை ஸ்வராவுக்கும் இடையே சண்டை ஏற்படும். அப்போது ஆத்திரத்தில் ஸ்வரா சல்மானின் முகத்தில் ஓங்கி குத்துகிறாராம். சண்டைக் காட்சிகளில் கூட சல்மானை வில்லன்கள் அடிக்காத நிலையில் ஸ்வரா குத்தியிருக்கிறார்.

ஸ்வரா

ஸ்வரா

அனைத்து வீடுகளிலும் நடக்கும் அண்ணன், தங்கை சண்டையை தான் காட்சியாக்கியுள்ளனர். இந்த காட்சியை நினைத்து எனக்கு மிகவும் பதட்டமாக உள்ளது என்றார் ஸ்வரா.

சல்மான் ரசிகர்கள்

சல்மான் ரசிகர்கள்

இந்த படம் ரிலீஸானால் சல்மான் கானின் ரசிகர்கள் என்னை அடிக்க வரப் போகிறார்கள் என்றார் ஸ்வரா பாஸ்கர்.

தீபாவளி

தீபாவளி

பிரேம் ரத்தன் தான் பாயோ படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் ஆக உள்ளது.

சோனம் கபூர்

சோனம் கபூர்

இந்த படத்தில் நடிக்கையில் சோனம் கபூர் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Salman Khan's one of the most awaited upcoming movie is Prem Ratan Dhan Payo starring Sonam Kapoor in opposite. While, Salman Khan is hardly seen getting beaten by any antagonist in his films, the actor will be punched by a girl in Prem Ratan Dhan Payo.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil