“ஆயிரம் கோடி… நீங்க பார்த்தீங்க… அங்க தெரிஞ்சா அவ்ளோதான்”: பிக்பாஸ் சம்பளம் குறித்து சல்மான் கான்

மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டாரான நடிகர் சல்மான் கானுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்தி படங்களில் நடித்துவரும் சல்மான் கான், பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக் பாஸ் சீசன் 16வது நிகழ்ச்சிக்காக சல்மான் கானுக்கு ஆயிரம் கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்

அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்

இந்தி சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளாக கான் நடிகர்களின் ராஜாங்கம் தான் நடந்து வருகிறது. அமீர்கான், ஷாருக்கான் ஆகியோருடன் சல்மான் கானும் இந்தி ரசிகர்களை ஆட்சி செய்து வருகின்றனர். சல்மான் கான் படங்களுக்கு இந்தி ரசிகர்களை கடந்து உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.. அதனால் சல்மான் கானுக்கு தயாரிப்பாளர்கள் பல கோடி ரூபாய் சம்பளத்தை கொட்டிக் கொடுக்கின்றனர். அதற்கேற்றபடி சல்மான் கானின் படங்களில் பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பும்.

பிக்பாஸில் சல்மான் கான்

பிக்பாஸில் சல்மான் கான்

திரைப்படங்களில் மட்டும் இல்லாமல் ஏராளமான சர்ச்சைகளிலும் சிக்கி பிரபலமானவர் சல்மான் கான். மான் வேட்டை, ஐஸ்வர்யா ராய் உடன் காதல் என இவரை சுற்றிய சர்ச்சைகளின் எண்ணிக்கை பல நூறுகளைத் தாண்டும். திரைப்படங்கள் தவிர விளம்பரங்களில் நடித்து பணம் சம்பாதிக்கும் சல்மான் கான், இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். அதன் மூலமும் சல்மான் கானுக்கு பல கோடி ரூபாய் வருமானம் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால், சல்மான் கானின் சொத்து மதிப்பு பல ஆயிரம் கோடிகளுக்கு மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது.

ஆயிரம் கோடி சம்பளம்?

ஆயிரம் கோடி சம்பளம்?

இந்தியில் இதுவரை ஒளிபரப்பான 15 பிக் பாஸ் சீசன்களையும் சல்மான் கான் தான் தொகுத்து வழங்கியுள்ளார். இதனால், இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பு உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியை வெரைட்டியாக தொகுத்து வழங்கிய சல்மான் கானுக்கு 15வது சீசனை தொகுத்து வழங்க 350 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், 16வது சீசனுக்கான அவருக்கு ஆயிரம் கோடி சம்பளம் கொடுக்க உள்ளதாகவும், ஆனால் அவர் மறுத்துவந்ததாகவும் சொல்லப்பட்டது.

இதெல்லாம் ஓவரா இல்லையாப்பா?

இதெல்லாம் ஓவரா இல்லையாப்பா?

இந்நிலையில், இதுகுறித்து பிக்பாஸ் 16வது சீசன் அறிமுக விழாவில் சல்மான்கான் விளக்கம் அளித்துள்ளார். அதில், "நான் ஆயிரம் கோடி சம்பளம் வாங்கினால் வாழ்க்கையில் அதன் பிறகு சம்பாதிக்கவே வேண்டாம். இந்தளவுக்கு சம்பளம் பெற்றால் வழக்கறிஞர் பீஸ் உட்பட பல செலவுகளும் அதிகமாகும். மேலும் இதுமட்டும் வருமான வரித்துறைக்கு தெரிந்தால் அவ்வளவு தான். அவர்கள் வந்து சோதிக்கும் போது உண்மை தெரியும். சில நேரங்களில் கடுப்பாகி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டேன் என சொல்லியும் அவர்கள் என்னை விடவில்லை. இந்த 12 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தியதில் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்" எனக் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X