»   »  டிரைவிங் ஸ்கூலை திறந்து வைத்த காரை ஏற்றி ஒருவரை கொன்ற சல்மான்: கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

டிரைவிங் ஸ்கூலை திறந்து வைத்த காரை ஏற்றி ஒருவரை கொன்ற சல்மான்: கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கார் டிரைவிங் ஸ்கூலை திறந்து வைத்த பாலிவுட் நடிகர் சல்மான் கானை நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.

நடிகர் சல்மான் கான் மும்பையில் குடிபோதையில் கார் ஓட்டி சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது வாகனத்தை ஏற்றியதில் ஒருவர் பலியானார், 4 பேர் காயம் அடைந்தனர்.

இந்த வழக்கில் இருந்து சல்மான் தப்பிவிட்டார். இந்நிலையில் அவர் துபாயில் கார் டிரைவிங் ஸ்கூலை நேற்று திறந்து வைத்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் அவரை மரண கலாய் கலாய்த்துள்ளனர்.

சேத்தன்

சேத்தன் பகத் புத்தகங்கள் எழுதினால் நான் டிரைவிங் ஸ்கூலை துவங்கி வைக்கலாம்- சல்மானின் நினைப்பு

மான்

துபாயில் டிரைவிங் ஸ்கூலை திறந்து வைத்த சல்மான் கான். அடுத்தது என்ன மான் பாதுகாப்பா?

வழக்குகள்

துபாயில் டிரைவிங் ஸ்கூலை திறந்து வைக்கும் சல்மான் கான்.
அப்படியே காரை ஏற்றிவிட்டு தப்பியோடும் வழக்குகளை சமாளிக்கவும் பயிற்சி அளிப்பார்.

சல்மான் கான்

ஏஐ பற்றி ராகுல் காந்தி பேசுகிறார்
சல்மான் கான் டிரைவிங் ஸ்கூலை திறந்து வைக்கிறார்
கிம் ஜோங் யுன் ஜனநாயகம் பற்றி பேசுவதற்காக காத்திருக்கிறோம்

English summary
Netizens troll Bollywood actor Salman Khan as he inaugurated a driving school in Dubai on thursday.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil