»   »  அவளுக்கு மட்டும் அதிர்ஷ்டம் கூரையை பிச்சுக்கிட்டு கொட்டுதே: சக நடிகைகள் பொறாமை

அவளுக்கு மட்டும் அதிர்ஷ்டம் கூரையை பிச்சுக்கிட்டு கொட்டுதே: சக நடிகைகள் பொறாமை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நாகினி தொலைக்காட்சி தொடரில் நாகினி பாம்பாக வந்த மவுனி ராயை சல்மான் கான் பாலிவுட்டில் அறிமுகம் செய்து வைக்க உள்ளாராம்.

நாகினி தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலம் ஆனவர் மவுனி ராய். தமிழகத்தில் மவுனி ராய்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். நாகினி மற்றும் நாகினி 2வது சீசனில் மவுனி ராய் நடித்தார்.

3வது சீசனில் அவருக்கு பதிலாக வேறு நடிகையை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்கள்.

சல்மான் கான்

சல்மான் கான்

பல நடிகைகளை பாலிவுட்டில் அறிமுகம் செய்து வைத்த பெருமை சல்மான் கானுக்கு உண்டு. சினேகா உல்லல், டெய்சி ஷா, ஜரீன் கான், அதையா ஷெட்டி, சோனாக்ஷி சின்ஹா ஆகியோரை சல்மான் கான் பாலிவுட்டில் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

மவுனி ராய்

மவுனி ராய்

சல்மான் கான் மவுனி ராயை பாலிவுட்டில் அறிமுகம் செய்து வைக்கப் போகிறாராம். சோனாக்ஷியிடம் பார்த்த அதே திறமை மவுனியிடமும் உள்ளதாக சல்மான் கூறியுள்ளாராம்.

சோனாக்ஷி சின்ஹா

சோனாக்ஷி சின்ஹா

தனது தம்பி அர்பாஸ் கான் தயாரித்த தபாங் படம் மூலம் சோனாக்ஷி சின்ஹாவை அறிமுகம் செய்து வைத்தார் சல்மான். தபாங் 2 படத்திலும் சல்மான் ஜோடியாக சோனா நடித்துள்ளார்.

சித்தார்த் மல்ஹோத்ரா

சித்தார்த் மல்ஹோத்ரா

சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கவிருக்கும் படத்தில் மவுனி ராயை சல்மான் கான் அறிமுகம் செய்து வைக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. மவுனி ராய்க்கு அடித்துள்ள அதிர்ஷ்டத்தால் பிற நடிகைகள் பொறாமையில் உள்ளனர்.

English summary
According to reports, Salman Khan is set to launch Nagini fame Mouni Roy in Bollywood.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil