»   »  'அவர்' தொகுத்து வழங்க மாட்டேன்னு அடம்பிடித்தும் விடாமல் அழைத்து வந்த பிக் பாஸ்

'அவர்' தொகுத்து வழங்க மாட்டேன்னு அடம்பிடித்தும் விடாமல் அழைத்து வந்த பிக் பாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டேன் என்று அடம்பிடித்தாலும் தன்னை விட மாட்டேன் என்கிறார்கள் என நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் இந்தி நிகழ்ச்சியின் 11வது சீசன் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. இந்நிலையில் மும்பையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் அறிமுக விழா நடந்தது.

விழாவில் சல்மான் கான் கலந்து கொண்டு நடனம் ஆடினார்.

பிக் பாஸ்

பிக் பாஸ்

நான் 4வது சீசனில் இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறேன். ஒவ்வொரு சீசனின்போதும் நான் தொகுத்து வழங்க மாட்டேன் என்று அடம்பிடிக்கிறேன் என்று சல்மான் தெரிவித்துள்ளார்.

சல்மான்

சல்மான்

நான் அடம்பிடித்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என்னை விடுவதாக இல்லை. நான் இல்லாமல் அவர்களுக்கு டிஆர்பி வராது என்று நினைக்கிறார்கள் என்கிறார் சல்மான்.

கற்றல்

கற்றல்

பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்துவதன் மூலம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். இந்த நிகழ்ச்சியை நடத்துவது சந்தோஷமாக உள்ளது. பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் யாரும் வன்முறை சம்பவங்களில் ஈடுபடக் கூடாது என்று சல்மான் எச்சரித்துள்ளார்.

சம்பளம்

சம்பளம்

பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்த நாள் ஒனறுக்கு சல்மான் கானுக்கு ரூ. 11 கோடி சம்பளம் அளிக்கிறார்கள். சல்மானின் சம்பளத்தை கேட்டு ஆளாளுக்கு ஆச்சரியத்தில் உள்ளனர்.

English summary
Salman Khan revealed that they have been doing Bigg Boss since many years. Every year he tells the Colors channel that he does not want to do the show, but they do not agree to it.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil