»   »  சல்மானின் மிகச்சிறந்த படமாக மாறிய பஜ்ரங்கி பைஜான்

சல்மானின் மிகச்சிறந்த படமாக மாறிய பஜ்ரங்கி பைஜான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஹிந்தி சூப்பர்ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் இன்று வெளிவந்திருக்கும் பஜ்ரங்கி பைஜான் திரைப்படம், ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று இருக்கிறது. சல்மானின் பிளாக்பஸ்டர் படங்களில் பஜ்ரங்கி பைஜானுக்கு கண்டிப்பாக ஒரு இடம் உண்டு என்று படத்தைப் பார்த்த ரசிகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

பாலிவுட் இயக்குநர் கபீர் கான் இயக்கத்தில் சல்மான், கரீனா கபூர், நவாஜுதின் சித்திக் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் பஜ்ரங்கி பைஜான். சல்மான் மிகவும் சிறப்பாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் என்று பெரும்பாலானவர்கள் கருத்துத் தெரிவித்து உள்ளனர்.

மேலும் இதுவரை வெளிவந்த ஹிந்தித் திரைப்படங்களில் பஜ்ரங்கி பைஜானுக்கு நிச்சயம் ஒரு இடமுண்டு என்று, சூடம் ஏற்றி சத்தியம் செய்யாத குறையாக கருத்துத் தெரிவித்துள்னர் படத்தைப் பார்த்த ரசிகர்கள்.

பஜ்ரங்கி பைஜான் கதை

பஜ்ரங்கி பைஜான் கதை

பாகிஸ்தானில் வளரும் சிறுமி ஷாகிதாவிற்கு பிறந்ததில் இருந்து பேச முடியாத பிரச்சினை இருக்கிறது.டெல்லியில் உள்ள தர்காவிற்குச் சென்றால் குணமாகும் என்று நம்பும் பெற்றோர் ஷாகிதாவை டெல்லிக்கு அழைத்து வருகின்றனர்.

தர்காவிற்குச் சென்று திரும்பும் வழியில் ரயிலில் இருந்து ஷாகிதா இறங்க, அவளைத் தவற விடுகின்றனர் பெற்றோர், மீண்டும் ரயில் ஏறி டெல்லிக்கு வரும் ஷாகிதா அங்கு அனுமான் பக்தரான சல்மான் கண்ணில் பட அவளைத் தனது வீட்டிற்க்கு அழைத்துச் செல்கிறார் சல்மான்.

ஷாகிதாவை மீண்டும் அவளது பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டி பாகிஸ்தான் புறப்படுகிறார் சல்மான், அவரால் அந்தக் குழந்தையை அவளது பெற்றோரிடம் ஒப்படைக்க முடிந்ததா என்பதே கிளைமாக்ஸ்.

சல்மான் கான்

சல்மான் கான்

வழக்கம் போல தனது அருமையான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்து இருக்கிறார் சல்மான் கான், இதுநாள்வரை சல்மான் நடித்த படங்களை விட பஜ்ரங்கி பைஜான் நிச்சயம் ஒருபடி உயர்ந்து நிற்கிறது.

சிறுமி ஷாகிதா

சிறுமி ஷாகிதா

சிறுமி ஷாகிதாவாக நடித்திருக்கும் ஹர்ஷாலி மல்கோத்ராவின் நடிப்பு சூப்பர், சல்மானுக்கு ஈடு கொடுத்து நடித்திருக்கும் இந்தச் சிறுமிக்கு திரைத்துறையில் பிரகாசமான எதிர்காலம் உள்ளது.

கரீனா கபூர்

கரீனா கபூர்

ஏற்கனவே பல படங்களில் சல்மானுடன் இணைந்து நடித்த கரீனா, இந்தப் படத்தில் சல்மானின் மனைவியாக நடித்திருக்கிறார். பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி கரீனாவின் கேரக்டர் இல்லை எனினும் தனக்குக் கொடுத்த பாத்திரத்தை சிறப்பாகச் செய்திருக்கிறார்.

படம் வாழ்ந்தது போன்ற உணர்வு தருகிறது

படம் வாழ்ந்தது போன்ற உணர்வு தருகிறது

தொடர்ந்து இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கும் பஜ்ரங்கி பைஜான் படத்தைப் பார்த்த ஒரு ரசிகையின் கருத்து இது " படம் பார்க்கும்போது அந்தக் கதாபாத்திரங்களுடன் சேர்ந்து சிரித்து,சேர்ந்து அழுகின்ற அளவுக்கு அவ்வளவு உணர்வுபூர்வமாகப் படம் இருக்கின்றது. படம் பார்த்த உணர்வைத் தரவில்லை, வாழ்ந்த உணர்வைத் தருகின்றது என்று கூறியிருக்கிறார்.

நல்ல படத்திற்கு மக்களின் வரவேற்பு என்றும் குறைவதில்லை, என்பதை மீண்டும் ஒருமுறை அழுத்தமாக நிரூபித்து இருக்கின்றது பஜ்ரங்கி பைஜான்.

English summary
Bajrangi Bhaijaan Salman Khan, Kareena Kapoor, Nawazuddin Siddiqui and Harshaali Malhotra in leads, Movie Got Positive Reviews.
Please Wait while comments are loading...