பூஜா ஹெக்டே வேணுமா.. இருக்கு.. ஜகபதி பாபு வேணுமா.. இருக்கு! சல்மான் கானின் புது பட டீசர் எப்படி?

மும்பை: சல்மான் கான், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி உள்ள KisiKa Bhai KisiKi Jaan டீசர் தற்போது வெளியாகி பாலிவுட் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. ஆனால், தென்னிந்திய ரசிகர்கள் பூஜா ஹெக்டேவையும் ஜகபதி பாபுவையும் பார்த்து விட்டு டீசரை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

ஷாருக்கானின் பதான் படத்தில் கேமியோ ரோலில் ஒரு சண்டைக் காட்சியில் அதிரடி என்ட்ரி கொடுத்து சல்மான் கான் போட்டுள்ள மாஸ் ஃபைட் தியேட்டர்களில் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

இந்நிலையில், பதான் படத்துடன் சேர்த்து தனது அடுத்த படத்தின் டீசரையும் வெளியிட்டுள்ளார் சல்மான் கான்.

சல்மான் கானின் புதிய படம்

சல்மான் கானின் புதிய படம்

இயக்குநர் ஃபர்கத் சம்ஜி இயக்கத்தில் சல்மான் கான் தயாரித்து நடித்துள்ள கிஸிகா பாய் கிஸிகா ஜான் திரைப்படத்தின் அட்டகாசமான டீசர் தற்போது வெளியாகி உள்ளது. வேட்டி சட்டையில் தென்னிந்திய டச் உடன் சல்மான் கான் நடித்துள்ள சென்னை எக்ஸ்பிரஸ் படம் போல இந்த படத்தின் டீசர் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. பூஜா ஹெக்டே ஹீரோயினாக காதல் பொழிய ஆக்‌ஷனில் அதகளம் செய்கிறார் சல்மான் கான்.

தெறி, மாஸ்டர் பார்த்த மாதிரியே இருக்கு

தெறி, மாஸ்டர் பார்த்த மாதிரியே இருக்கு

ஆரம்பத்தில் பைக் ஓட்டிக் கொண்டு சல்மான் கான் வரும் அந்த காட்சி தெறி படத்தை நியாகப்படுத்துகிறது. அந்த மெட்ரோ ஃபைட் சீன் அப்படியே மாஸ்டர் படத்தை பார்த்தது போல உள்ளது. தெறி வேணுமா தெறி இருக்கு.. மாஸ்டர் வேணுமா மாஸ்டர் இருக்கு.. சென்னை எக்ஸ்பிரஸ் வேணுமா சென்னை எக்ஸ்பிரஸும் இருக்கு என தில் ராஜு ஸ்டைலில் சல்மான் கானின் புதிய டீசர் இருக்கு.

பூஜா ஹெக்டே இருக்காரு

பூஜா ஹெக்டே இருக்காரு

நடிகை பூஜா ஹெக்டே நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பல பிரம்மாண்ட பட்ஜெட் திரைப்படங்கள் படு தோல்வியை சந்தித்த நிலையில், சல்மான் கானின் இந்த படத்திலும் அவரே நாயகியாக நடித்துள்ளார். சல்மான் கானை பூஜா ஹெக்டே காதலித்து வருவதாக சொல்லப்படுவதே இந்த படத்தின் ப்ரோமோஷனுக்கான யுக்தி என்றும் ட்ரோல்கள் பறக்கின்றன.

ஜகபதி பாபு இருக்காரு

ஜகபதி பாபு இருக்காரு

தமிழ், தெலுங்கு சினிமாவில் வில்லனாக நடித்து கம்பெனி ஆர்ட்டிஸ்ட்டாகவே மாறிவிட்ட வில்லன் நடிகர் ஜகபதி பாபு தான் இந்த படத்தில் சல்மான் கானுக்கு வில்லனாக வருகிறார். கமர்ஷியல் படத்துக்கான ஒட்டுமொத்த கன்டென்ட்டும் இந்த படத்தில் இருக்கு என்றும் கடைசி சில நொடிகளில் அடிபட்டு எழுந்து வந்து எமோஷனலாக சல்மான் கான் பேசும் காட்சிகளும் ரசிகர்களை கவர்ந்துள்ளன.

வெங்கடேஷ் மாஸ் காட்டுறாரு

தெலுங்கில் சிரஞ்சீவியின் காட்ஃபாதர் படத்தில் சல்மான் கான் நடித்த நிலையில் ஏகப்பட்ட தெலுங்கு பிரபலங்கள் நண்பர்களாக மாறிவிட்டனர் போல, இந்த படம் பாலிவுட் படமா டோலிவுட் படமா என்றே தெரியாத அளவுக்கு தெலுங்கு நடிகர்கள் நிறைந்துள்ளனர். நடிகர் வெங்கடேஷ் இடம்பெறும் காட்சிகள் வித்தியாசமாக மாஸ் காட்டுகின்றன. சல்மான் கான் பாறாங்கல்லை தள்ளி காரை பறக்கவிடும் காட்சிகளும் நிறையவே இருக்கு.. அனல் அரசு தான் ஸ்டன்ட் மாஸ்டர் என்பது கூடுதல் தகவல். வரும் ரம்ஜான் பண்டிகையை டார்கெட் செய்து இந்த படத்தை ரிலீஸ் செய்யப் போகிறார் சல்மான் கான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X