»   »  சுல்தான் பர்ஸ்ட் லுக் வெளியானது... அமீரின் டங்கல்க்கு டப் கொடுப்பாரா சல்மான்

சுல்தான் பர்ஸ்ட் லுக் வெளியானது... அமீரின் டங்கல்க்கு டப் கொடுப்பாரா சல்மான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சல்மான் கானின் முரட்டுத்தனமான தோற்றத்துடன் சுல்தான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி இருக்கிறது. விளையாட்டு வீரராக சல்மான் கான் நடிக்கும் இந்தப் படத்தில் தனது உடல் எடையை அதிகரித்து ரசிகர்களை மிரட்டி இருக்கிறார் சல்மான்.

மல்யுத்தம் விளையாட்டு அல்ல என்ற வாசகங்களுடன் வெளியாகியிருக்கும் இந்தப் போஸ்டர் சல்மான் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Salman Khan's Sultan First Look Out

ஹரியானாவைச் சேர்ந்த விளையாட்டு வீரராக சல்மான் இந்தப் படத்தில் நடிக்கிறார் அலி அப்பாஸ் ஜாபர் இயக்கவிருக்கும் சுல்தானை யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

சமீபத்தில் நடிகர் அமீர்கான் தான் விளையாட்டு வீரராக நடிக்கும் டங்கால் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் சல்மானும் தனது படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது ரசிகர்களுக்கு வசதியாகப் போய்விட்டது.

எந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் நன்றாக இருந்தது என்று சமூக வலைதளங்களில் தற்போது பட்டிமன்றம் நடத்தி வருகின்றனர். சுல்தான் படத்தில் நடிப்பவர்கள் பற்றிய முழு விவரங்களை படக்குழுவினர் இன்னும் வெளியிடவில்லை.

எனினும் பரிணிதி சோப்ரா சல்மான் கானின் ஜோடியாக நடிக்கவிருக்கிறார் என்று கூறுகின்றனர். அடுத்த ஆண்டு வெளியாகும் சுல்தான் ஷாரூக்கானின் ராயிஸ் படத்துடன் மோதவிருப்பது குறிப்பிடத்தக்கது.

சுல்தான் ஷூட்டிங்கே ஆரம்பிக்கல அதுக்குள்ளே 2 படத்துக்கு டப் கொடுக்கிறாரே சல்மான்....

English summary
Salman Khan's Sultan first look Released Today.Salman has sported the subtle moustache look posing as a wrestler and a quote written on his picture, "Wrestling is not a sport, it's about fighting what lies within".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil