»   »  'உட்தா பஞ்சாப்' வரிசையில் ரிலீசுக்கு முன்பே ஆன்லைனில் வெளியான 'சுல்தான்'.. படக்குழு அதிர்ச்சி!

'உட்தா பஞ்சாப்' வரிசையில் ரிலீசுக்கு முன்பே ஆன்லைனில் வெளியான 'சுல்தான்'.. படக்குழு அதிர்ச்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: 'சுல்தான்' திரைப்படம் ரிலீசுக்கு முன்பே ஆன்லைனில் வெளியானதால் படக்குழு அதிர்ந்து போயுள்ளது.

சல்மான் மல்யுத்த வீரராக நடித்திருக்கும் இப்படம் உலகம் முழுவதும் இன்று 5௦௦௦ ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

100 கோடி பட்ஜெட்டில் உருவான 'சுல்தான்' படத்தை பத்திரிக்கையாளர்களுக்கு கூட போட்டுக் காட்டாமல் தயாரிப்பு நிறுவனம் ரகசியம் காத்து வந்தது. எனினும் படக்குழுவின் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி இப்படம் நேற்று திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியானது.

Salman Khan's Sultan leaked online

தணிக்கைக் குழுவினரின் சான்றிதழுடன் இப்படம் வெளியானதால் அதிர்ச்சியடைந்த படக்குழு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

தற்போது சைபர் கிரைம் போலீசார் இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். 'சுல்தான்' இணையத்தில் வெளியானாலும் படத்தின் வசூலை அது பாதிக்கவில்லையாம்.

மேலும் திரையிட்ட இடங்களிலும் படம் ஹவுஸ்புல் என்பதால் படக்குழு பெரிதும் நிம்மதி அடைந்திருக்கிறது.இதேபோல 'உத்தா பஞ்சாப்' திரைப்படம் இணையத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

English summary
Salman Khan's Sultan leaked online Before Release.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil