மூன்றே நாட்களில் 106 கோடியை அள்ளிய சுல்தான்!
மும்பை: சல்மான் கான் நடிப்பில் ரம்ஜான் ஸ்பெஷலாக வெளியான ‘சுல்தான்' ரிலீசான மூன்றே நாட்களில் 106 கோடி ரூபாயை குவித்துள்ளது.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் - அனுஷ்கா ஷர்மா ஜோடியாக நடித்த ‘சுல்தான்' திரைப்படம் கடந்த 6-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

சுமார் சுமார் ஐயாயிரத்துக்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியான ‘சுல்தான்' முதல்நாள் டிக்கெட் விற்பனையின் மூலம் மட்டும் 36.54 கோடி ரூபாயை வசூலித்தது.
கடந்த மூன்று நாட்களில் நாடு முழுவதும் 106 கோடி ரூபாயை வசூலித்துள்ள இந்தப் படம் ஷாருக் கானின் ‘ஹேப்பி நியூ இயர்' படத்தின் சாதனையை முந்தியுள்ளது.

வரும் நாட்களில் மேலும் பல வசூல் சாதனைகளை நிகழ்த்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Comments


Click it and Unblock the Notifications