நிறைய தப்பு பண்ணிட்டேன்...மன்னிப்பு கேட்கும் சல்மான் கான்

மும்பை : தனது வாழ்க்கையில் செய்த தவறுகள் பற்றி சமீபத்தில் மனம் திறந்து வெளிப்படையாக பேசி உள்ளார் பாலிவுட் நடிகர் சல்மான் கான். தனது செயல்களுக்காக மன்னிப்பு கேட்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் நேரலையில் பேசிய சல்மான் கான், பிரபல நடிகை கபீர் பேடியுடன் பேசினார். அப்போது வாழ்க்கையில் தான் செய்த தவறுகளை வெளிப்படையாக 'Stories I Must Tell: The Emotional Life of an Actor'என்ற பெயரில் சுயசரிதை புத்தகமாக எழுதி உள்ளதாக சல்மான் கான் தெரிவித்தார்.

திருத்திக் கொள்ள முயற்சிக்கிறேன்

திருத்திக் கொள்ள முயற்சிக்கிறேன்

மேலும், இது தான் மிகவும் கஷ்டமான விஷயம். ஒருவர் தான் செய்த தவறுகளை மறுக்கத்தான் செய்வார். அவர்களில் ஒருவனாக தான் இப்போது உங்கள் முன் அமர்ந்திருக்கிறேன். நான் எப்போதும் சொல்வேன், நான் அதை செய்யவில்லை என்று. ஆனால் நீங்கள் அதை நான் தான் செய்தேன் என்றால், நான் அதை செய்வேன். அதை திருத்திக் கொள்ள முயற்சி செய்கிறேன். அதற்கு நிறைய தைரியம் வேண்டும்.

தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கிறேன்

தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கிறேன்

பல சமயங்களில் நான் நிறைய தவறு செய்திருக்கிறேன். அதற்காக மன்னிப்பு கேட்டிருக்கிறேன். தவறுகள் நடக்கலாம். ஆனால் அதே தவறை திரும்ப திரும்ப செய்வது சரியல்ல. நேர்மையாக இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதையும் புத்தகத்தில் எழுதி உள்ளேன்.

சரியாக எழுதியிருக்கேனா

சரியாக எழுதியிருக்கேனா

நீங்கள் புத்தகம் எழுதுகிறீர்கள் என்றால் எதற்கு மிக முக்கியமான விஷயம் உங்களின் ஆத்மாவின் ஆழத்தில் இருப்பதை பார்க்க வேண்டும். நான் இதை சரியாக எழுதி இருக்கிறேனா என தெரியவில்லை. அதை படித்து விட்டு, உங்கள் கருத்தை எழுதுங்கள்.

எனக்கு எழுதுங்கள்

எனக்கு எழுதுங்கள்

எனக்கு நான் உண்மையாக இருக்க பார்க்கிறேன். பிறகு மற்றவர்களுக்கும் உண்மையாக இருக்கிறேன். மற்றவர்கள் எனக்கு என்ன செய்தார்கள் என்பதையும் நேர்மையாக எழுதி உள்ளேன் என்றார்.

திருமணம் பற்றியும் சொல்லியிருக்கேன்

திருமணம் பற்றியும் சொல்லியிருக்கேன்

கபீர் பேடி, சல்மான் கானிடம் திருமணம், உறவுகள், மற்றவர்கள் பற்றி எழுதி உள்ளீர்களா என கேட்டார். அதற்கு பதிலளித்த சல்மான் கான், பர்வீன் பாபியுடனான எனது திருமணம் எவ்வாறு நின்று போனது, ஹாலிவுட்டில் நான் சந்தித்த நிதி நெருக்கடிகள் என அனைத்தையும் கூறி உள்ளேன் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X