மதராஸி படம் பிளாப்.. ஏ.ஆர். முருகதாஸை தாக்கி பேசிய சல்மான் கான்!

மும்பை: பாலிவுட் ஸ்டார் சல்மான் நடித்த சிக்கந்தர் படம் மோசமான முறையில் தோல்வி அடைந்தது. அந்த படத்தின் தோல்விக்கு சல்மான் கான் தான் காரணம். காலையில் படப்பிடிப்பை ஆரம்பித்தாலும் சல்மான் கான் பகல் நேர ஷூட்டிங்கிற்கு வரமே மாட்டார். இரவு நேரம் தான் படப்பிடிப்புக்கு வருவார் என ஏ.ஆர் முருகதாஸ் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இதற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பதில் அளித்துள்ள சல்மான், இயக்குனர் ஏ.ஆர். முருகதாசை மறைமுக தாக்கி பேசியது மட்டுமில்லாமல் அவரை கிண்டலடித்துள்ளார்.

இந்தி பிக் பாஸ் சீசன் 19 நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பானது. இதில், 'வீக்கெண்ட் கா வார்' எபிசோடில் நகைச்சுவை நடிகர் ரவி குப்தாவுடன் சல்மான் கான் உரையாடினார். அப்போது, சல்மான் கானோ, சூர்யவன்ஷி, நிஷ்சய் ஆகிய படங்களில் நடித்ததை நினைத்து வருத்தப்பட்டேன் என்றார். அப்போது, ரவி குப்தா,அண்மையில் வெளியான படத்தில் நடித்ததை நினைத்து வருத்தப்பட்டீர்களா என்று கேட்டார். அதற்கு சல்மான் கான், நீங்கள் சிக்கந்தர் படத்தை மனதில் வைத்து பேசுகிறீர்கள். நான் சிக்கந்தர் படத்தில் நடித்ததற்காக வருத்தப்படவில்லை, சிலர் 'சிக்கந்தர்' படத்தில் நடித்ததற்காக வருத்தப்படுவதாக சொல்கிறார்கள். ஆனால், அதில் உண்மை இல்லை. படத்தின் கதைக்களம் நன்றாக இருந்தது. படத்தின் இயக்குநர் படத்தின் தோல்விக்கு நான் இரவு படப்பிடிப்புக்கு வந்தது தான் காரணம் என கூறியுள்ளார்.
ஆனால், என் விலா எலும்புகள் உடைந்திருந்தது தான் காரணம். சமீபத்தில் அவரது மற்றொரு படம் வெளியாகி உள்ளது. அந்த படத்தில் நடித்த நடிகர், காலை 6 மணிக்கே படப்பிடிப்புக்கு வந்துவிடுவார். ஆனால், முருகதாஸ் இயக்கிய 'மதராசி' படமும் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வி அடைந்தது என்றார்.

Salman Khan slams Sikandar director A R Murugadoss
Photo Credit:

சல்மான் கான்:'சிக்கந்தர்' படத்தின் தோல்விக்கு முருகதாஸும், தயாரிப்பாளர் சாஜித் நாடியாத்வாலாவும் தன் மீது பழிபோடுகின்றனர். முதலில் இந்தப் படம் முருகதாஸ் மற்றும் சாஜித் நாடியாத்வாலாவுக்கு சொந்தமானது, பின் சாஜித் படத்திலிருந்து விலகினார். அதன் பிறகு முருகதாஸும் விலகி தெற்கில் ஒரு படம் எடுக்க சென்றார். "முருகதாஸ் 'மதராசி' என்ற படத்தை இயக்கியுள்ளார். அது 'சிக்கந்தரை' விட பெரிய பிளாக்பஸ்டர்" என்று சல்மான் கேலியாகச் சொன்னார். தற்போது சல்மான் கான், இயக்குனர் அபூர்வா லக்கியா இயக்கும் 'பேட்டில் ஆஃப் கல்வான்' என்ற போர் நாடகப் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படப்பிடிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X