»   »  "ரியல்" பாடிகார்டுக்கு பளார் விட்ட "ரீல்" சல்மான்... மறுபடியும் பஞ்சாயத்து!

"ரியல்" பாடிகார்டுக்கு பளார் விட்ட "ரீல்" சல்மான்... மறுபடியும் பஞ்சாயத்து!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சர்ச்சைகளின் மன்னன் என்று பெயரெடுத்த நடிகர் சல்மான் கான் தனது மெய்க்காப்பாளர் ஒருவரை அறைந்ததன் மூலம் மீண்டும் ஒரு புதிய சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கிறார்.

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என்று புகழப்படும் சல்மான் கான் சமீபத்தில் ஒரு இரவு விருந்திற்காக வெளியில் சென்றிருக்கிறார்.

அப்போது சல்மானைப் பார்த்த செய்தியாளர்கள் அவரை நெருங்க முயன்றிருக்கின்றனர். இதனைக் கண்ட அவரது மெய்க்காப்பாளர் அவர்களைத் தள்ளிவிட, கோபத்தில் தனது மெய்க்காப்பாளரை ஓங்கி அறைந்து விட்டார் சல்மான் கான்.

சல்மான் கான்

சல்மான் கான்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் என்று புகழப்படும் சல்மான் கான் அவரது நடிப்பிற்காக அறியப்பட்டதை விட சர்ச்சைகளுக்காக அறியப் பட்டதே அதிகம். பிரிக்க முடியாதது எது என்று கேட்டால் சல்மான்கானையும், சர்ச்சைக்களையும் என்று கூறலாம். இதுவரை சல்மானுக்கு வந்த காதல்களும் அவரது இந்த நிலைக்கு காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

பாடிகார்டுக்கு பளார்

பாடிகார்டுக்கு பளார்

சமீபத்தில் சல்மான், ஹிருத்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சுசானே மற்றும் பிரீத்தி ஜிந்தா ஆகியோருடன் ஒரு இரவு விருந்திற்கு வெளியில் சென்றிருக்கிறார். வழக்கம் போல சல்மானை அந்த நேரத்தில் கண்ட செய்தியாளர்கள் அவரை நெருங்க முயன்றுள்ளனர். செய்தியாளர்களை சல்மானின் மெய்க்காப்பாளர்களில் ஒருவர் தள்ளிவிட, கோபம் கொண்ட சல்மான் கான் அவரை அறைந்து தள்ளி விட்டார். பிறகென்ன வழக்கம் போல இந்த செயலுக்காக தற்போது ஊடகங்களில் வறுபட்டுக் கொண்டிருக்கிறார் சல்மான் கான்.

ஏற்கனவே

ஏற்கனவே

இதே போல முன்னர் ஒருமுறை அவரது மெய்க்காப்பாளர் ஒருவர் செய்தியாளர்களை அடிக்க, அதனைக் கண்டித்து செய்தியாளர்கள் ஒட்டுமொத்தமாக சல்மான் கானை புறக்கணிக்க ஆரம்பித்தனர்.

ஐஸ்வர்யா ராய் -சல்மான் கான்

ஐஸ்வர்யா ராய் -சல்மான் கான்

மேலும் ஐஸ்வர்யா ராயுடனான காதல் முடிவிற்கு வந்த பின்னர் ஐஸ்வர்யாவை, சல்மான் கான் படுத்திய பாடு ஒட்டுமொத்த பாலிவுட் ஏன் இந்தியத் திரையுலகமும் நன்கு அறிந்தது தான். 1999 ல் ஆரம்பித்த இவர்கள் காதல் 2002 ம் ஆண்டு முடிவிற்கு வந்தது. ஆனால் இந்த விவகாரத்தை எளிதில் முடிக்க விரும்பாத சல்மான் ஐஸ்வர்யா வீட்டு வாட்ச்மேனைத் தாக்கி தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

ஒரு வழியாக

ஒரு வழியாக

கடைசியாக நடிகர் அபிஷேக் பச்சனை ஐஸ்வர்யா ராய் மணந்து கொண்ட பின்னரே இந்த சர்ச்சைகள் முடிவிற்கு வந்தன. ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன் திருமண வாழ்விற்கு அடையாளமாக தற்போது 5 வயதில் ஆராத்யா என்ற பெண் குழந்தை ஒன்று இருக்கிறது. அதே நேரம் 50 வயதான சல்மான் கான் இன்னும் பேச்சுலராகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.

கார் விபத்து வழக்கு

கார் விபத்து வழக்கு

இதே போல 2002 ம் ஆண்டு குடிபோதையில் கார் ஒட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் தற்போது மகாராஷ்டிர அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கிலிருந்து கடந்த வருடம் விடுதலையான சல்மான் கானுக்கு தற்போது இந்த விவகாரம் மீண்டும் தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது.இந்த முறை அவர் வழக்கிலிருந்து மீண்டுவருவது சற்று சிக்கலான ஒன்றாக மாறியிருப்பதால் அவர் மீண்டும் ஜெயிலுக்குப் போக நேரிடும் என்ற ஒரு அச்சமும் தற்போது உண்டாகியிருக்கிறது.

English summary
Bollywood Super Star Salman Khan Recently Slapped his own Bodyguard in Public Place. Now he is Created a New Controversy.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil