»   »  சல்மானுக்கு இது தேவைதான் -நடிகர் சுரேஷ் கோபி கருத்து

சல்மானுக்கு இது தேவைதான் -நடிகர் சுரேஷ் கோபி கருத்து

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்தி நடிகர் சல்மான் கானுக்கு இந்த தண்டனை தேவையானதுதான் என்று மலையாள நடிகர் சுரேஷ் கோபி கருத்து தெரிவித்துள்ளார்.

பிரபல இந்தி நடிகர் சல்மான் கடந்த 2௦௦2 ம் வருடம் குடிபோதையில் காரை ஓட்டி சென்று ரோட்டோரத்தில் படுத்திருந்தவர்கள் மீது காரை ஏற்றியதில் சம்பவ இடத்திலேயே ஒரு நபர் இறந்தார். இந்த வழக்கில் கைது செய்யப் பட்ட சல்மான் பின்பு ஜாமீனில் வெளிவந்தார்.

13 வருடங்களுக்கு மேல் நடந்த இந்த வழக்கில் தற்போது மும்பை அமர்வு நீதிமன்றம் 5 வருடங்கள் சிறை தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கி உள்ளது.

பாலிவுட் நட்சத்திரங்கள் அனைவரும் சல்மானுக்கு ஆதரவாக பேசி வரும் இந்த வேளையில் மலையாத் திரையுலகம் மற்றும் தெலுங்குத் திரையுலகில் இந்த தீர்ப்புக்கு ஆதரவு கிளம்பியுள்ளது.

மலையாள நடிகர் சுரேஷ் கோபி:

மலையாள நடிகர் சுரேஷ் கோபி:

பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி சல்மானுக்கு இந்த தண்டனை தேவை தான் என்று கருத்து தெரிவித்து உள்ளார்.இவர் தமிழில் சமஸ்தானம், தீனா ஆகிய படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத் தக்கது.

நிழலைப் போன்றே நிஜத்திலும்:

நிழலைப் போன்றே நிஜத்திலும்:

தனது படங்களில் நீதி,நேர்மை போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் சுரேஷ் கோபி நிஜத்திலும் அவ்வாறே என்பது இந்த கருத்தின் மூலம் உண்மையாகிறது.

தெலுங்கு நடிகை ரேணுகா தேசாய்:

தெலுங்கு நடிகை ரேணுகா தேசாய்:

தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் மூன்றாவது மனைவியான ரேணுகா தேசாயும் இத்தீர்ப்புக்கு ஆதரவு அளித்து பேசி இருக்கிறார்.

நீதி வென்றது:

நீதி வென்றது:

இத்தீர்ப்பு நீதி துறையின் மேல் உள்ள மதிப்பை அதிகரிக்க செய்கிறது.ரோட்டில் தூங்குபவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று தனது கருத்தை அவர் பதிவு செய்துள்ளார்.

இந்தி உலகின் சூப்பர் ஸ்டார்:

இந்தி உலகின் சூப்பர் ஸ்டார்:

அறிமுகமான காலத்தில் இருந்து இன்று எத்தனையோ இளைய தலைமுறை நடிகர்கள் வந்த போதிலும் தொடர்ந்து இந்தி பட உலகின் சூப்பர் ஸ்டார் மட்டுமல்லாது கலெக்ஷன் மன்னனாகவும் திகழும் சல்மான்கானுக்கு படங்களால் கிடைத்த வரவேற்ப்பையும் தாண்டி சர்ச்சைகளால் கிடைத்த புகழ் தான் அதிகம்.

 காதல் மன்னன் :

காதல் மன்னன் :

இந்தி திரை உலகில் அறிமுகமாகும், அறிமுகமான ஏன் ஏற்கனவே உச்சத்தில் இருக்கும் எல்லா நடிகைகளும் சல்மானுடன் நடிப்பதையே பெரிதும் விரும்புகின்றனர். நம் தமிழில் இருந்து இந்திக்கு சென்ற நடிகை அசினும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

திருமண வளையம்:

திருமண வளையம்:

எத்தனை நடிகைகளை காதலித்த போதும் இன்னும் திருமண வளையத்துக்குள் சிக்கவில்லை. திருமணம் ஆகாத காரணத்தால் இவருடன் உடன் நடிக்கும் நடிகைகளுடன் அடிக்கடி கிசுகிசுவில் சிக்கிக் கொள்வார். மனுஷனுக்கு உடம்பெல்லாம் மச்சம்யா..என்று நேற்று அறிமுகமான நடிகர்களைக் கூட பொறாமை கொள்ளும் அளவிற்கு கட்டழகு உடல் இருந்தும் கல்யாணம் இன்னும் கைகூடவில்லை என்பது சோகமே...

அமீர் கான் :

அமீர் கான் :

நடிகர் அமீர் கான் ஒருமுறை சல்மான் கானை கைகளில் விலங்கிட்டு அழைத்துச் சென்று திருமணம் செய்ய வேண்டும் என்று கூறினார். மனிதர் எந்த நேரத்தில் அப்படி சொன்னாரோ தெரியவில்லை சல்மானின் கைகளில் நிஜமாகவே "விலங்கு" ஏறும் நிலை வந்து விட்டது.

English summary
Malayalam actor Suresh Gopi and Telugu Actress Renu deasi have supported the court judgement against actor Salman Khan
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil