»   »  என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறீங்களா? - தீபிகாவின் வேண்டுகோளை நிராகரித்த சல்மான்!

என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறீங்களா? - தீபிகாவின் வேண்டுகோளை நிராகரித்த சல்மான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கானிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்த நடிகை தீபிகா படுகோனின் கோரிக்கையை நிராகரித்து இருக்கிறார்.

பாலிவுட்டின் பிரபல நடிகர்களில் ஒருவர் சல்மான் கான், கலர்ஸ் சேனலில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.

சமீபத்தில் இவர் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே கலந்து கொண்டார்.

பிக் பாஸ் 9

பிக் பாஸ் 9

கலர்ஸ் சேனலில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் முன்னணி நடிகை தீபிகா படுகோனே கலந்து கொண்டார். வரவிருக்கும் தனது தமாஷா படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கத்துடன் அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

திருமணம்

இந்த நிகழ்ச்சியின் இடையில் தீபிகா படுகோனே நடிகர் சல்மான் கானிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் சல்மான் கான் தீபிகா படுகோனின் இந்த கோரிக்கையை நிராகரித்து விட்டார். இது ஒரு வேடிக்கையான நிகழ்ச்சியாக இருந்தாலும் சல்மான் கானின் இந்த நிராகரிப்பு தீபிகாவையும் பார்வையாளர்களையும் சங்கடத்துக்குள்ளாக்கியது.

சல்மானைத் தவிர்க்கும் ரன்பீர்

சல்மானைத் தவிர்க்கும் ரன்பீர்

இந்த நிகழ்ச்சியில் தமாஷா நாயகன் ரன்பீர் கபூர் கலந்து கொள்ளவில்லை. ரன்பீரின் காதலி கத்ரினா கைப் சல்மானின் முன்னாள் காதலி என்பதால் அவர் இந்த நிகழ்ச்சியைத் தவிர்த்ததாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. சொந்த காரணங்களால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று இந்த செய்தியை நடிகர் ரன்பீர் கபூரும் உறுதிபடுத்தி இருக்கிறார்.

முன்னதாக

முன்னதாக

முன்னதாக அனில் கபூர் அளித்த தீபாவளி விருந்தில் ரன்பீர் கபூர் - கத்ரினா கைப் இருவரும் சல்மானின் வருகையை அறிந்ததும் அந்த இடத்தை விட்டு நைசாக நழுவி விட்டனர்.

ரன்பீரின் அறிமுகம்

ரன்பீரின் அறிமுகம்

ரன்பீர் பாலிவுட்டில் நாயகனாக அறிமுகமான சவாரியா படத்தில் சல்மான் கான் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக் கொடுத்திருந்தார். மேலும் ரன்பீர் - கத்ரினா இணைந்து நடித்த அஜாப் பிரேம் கி கசாப் ககாணி படத்திலும் சல்மான் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்துக் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
In Big Boss 9 Programme Deepika Padukone Asking Salman Khan to Marry her But Salman Khan Rejects Deepika Padukone's Marriage Proposal.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil