»   »  சிறையில் களி திங்க மறுத்த சல்மான் 3 மணிநேரம் செய்த காரியத்தால் போலீசார் அதிர்ச்சி

சிறையில் களி திங்க மறுத்த சல்மான் 3 மணிநேரம் செய்த காரியத்தால் போலீசார் அதிர்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil
சிறையில் சல்மான் 3 மணிநேரம் செய்த காரியத்தால் போலீசார் அதிர்ச்சி!

ஜெய்பூர்: பாலிவுட் நடிகர் சல்மான் கான் சிறையில் உணவு சாப்பிட மறுத்தபோதும் ஒரு விஷயத்தை மட்டும் செய்ய மறக்கவில்லை.

1998ம் ஆண்டு ஹம் சாத் சாத் ஹைன் படத்தில் நடித்தபோது ராஜஸ்தான் மாநிலத்தில் 2 மான்களை வேட்டையாடிய வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

இதையடுத்து கடந்த வியாழக்கிழமை அவர் ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சல்மான்

சல்மான்

பாதுகாப்பு கருதி சிறையில் சல்மான் தனி அறையில் தங்க வைக்கப்பட்டார். அவருக்கு எண் 106 வழங்கப்பட்டது. வியாழக்கிழமை இரவு வழங்கப்பட்ட கஞ்சியை குடிக்க அவர் மறுத்துவிட்டார்.

உணவு

உணவு

வியாழக்கிழமை இரவு எதுவும் சாப்பிடாத சல்மான் வெள்ளிக்கிழமை காலையும் சாப்பிட மறுத்துவிட்டார். முன்னதாக வியாழக்கிழமை மாலை சல்மான் படப்படப்பாக காணப்பட்டார். மருத்துவரை அழைத்து வரட்டுமா என்று சிறை அதிகாரி கேட்க வேண்டாம் என்று கூறிவிட்டு தரையில் போடப்பட்டிருந்த பாயில் படுத்துள்ளார்.

தூக்கம்

தூக்கம்

வியாழக்கிழமை இரவு நள்ளிரவுக்கு பிறகே சல்மான் தூங்கியுள்ளார். தொடர்ந்து மூன்று வேளை சாப்பிடாத சல்மான் கான் தனது தங்கைகள் மற்றும் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவை சந்தித்த பிறகு மதியம் 3.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை ஒர்க்அவுட் செய்துள்ளார்.

வியப்பு

வியப்பு

மூன்று வேளை சாப்பிடாத சல்மான் தனது அறையில் 3 மணிநேரம் ஒர்க்அவுட் செய்ததை பார்த்து போலீசார் வியந்துள்ளனர். இரவு 2 மணி ஆனாலும் ஒர்க்அவுட் செய்யாமல் தூங்கப் போக மாட்டார் சல்மான் என்பது குறிப்பிடத்தக்கது. வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு சனிக்கிழமை மதியம் ஜாமீன் வழங்கப்பட்டது.

English summary
Bollywood actor Salman Khan stunned police of Jodhpur central jail by doing workout for three hours after missing three successive meals.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X