»   »  இவங்க இரண்டு பேரும் சேர்ந்தாலே அது வெளங்காதே: நடிகர் திமிர் பேச்சு

இவங்க இரண்டு பேரும் சேர்ந்தாலே அது வெளங்காதே: நடிகர் திமிர் பேச்சு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சகோதரர்கள் சல்மான் கான், சொஹைல் கான் சேர்ந்து பணியாற்றினாலே அது சரிபடாதே என்று பாலிவுட் நடிகரும், விமர்சகருமான கேஆர்கே தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் சல்மான் கான் தயாரித்து நடித்து வரும் படம் டியூப்லைட். இந்த படத்தில் சல்மானின் கானின் தம்பி சொஹைல் கானும் நடிக்கிறார். படத்தை பஜ்ரங்கி பாய்ஜான் புகழ் கபீர் கான் இயக்கி வருகிறார்.

இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியானது.

 கேஆர்கே

கேஆர்கே

டியூப்லைட் ட்ரெய்லரை பார்த்தவர்கள் ஆஹா, ஓஹா என்று புகழ்ந்துள்ளனர். ஆனால் பாலிவுட் நடிகரும், விமர்சகருமான கமால் ஆர் கான் எனப்படும் கேஆர்கே மட்டும் கழுவி ஊத்தியுள்ளார்.

 சல்மான்

சல்மான்

நான் சல்மான் கானின் மிகப் பெரிய ரசிகன். டியூப்லைட் ட்ரெயலர் பார்த்தேன். அந்த அளவுக்கு நல்லா இல்லை. ஆனால் சல்மான் கானுக்காக படம் பிச்சிக்கிட்டு ஓடும் என்று கேஆர்கே தெரிவித்துள்ளார்.

 சொஹல் கான்

சொஹல் கான்

சொஹைல் கான் நடித்த எந்த படங்களும் ஓடவில்லை. அதிலும் குறிப்பாக சல்மானும், அவரது தம்பி சொஹைல் கானும் சேர்ந்து நடித்தால் அந்த படம் பிளாப் தான் என்கிறார் கேஆர்கே.

 முட்டாள்

முட்டாள்

படத்தில் சல்மான் கான் டியூப்லைட்டாக நடித்திருக்கலாம். ஆனால் என்னை பொறுத்த வரையில் அவர் முட்டாளாக நடித்துள்ளார். காலணிகளை கழுத்தில் தொங்க விடுவது, பஸ் மீது தாவுவது என்று சல்மான் ஏன் முட்டாளாக நடித்துள்ளார் என தெரியவில்லை என்று கேஆர்கே கூறியுள்ளார்.

 ரஜினி

ரஜினி

கேஆர்கே ரஜினிகாந்தை அழகில்லாவதவர் எப்படி சூப்பர் ஸ்டாராக உள்ளார் என்று கேட்டார். நடிகர் மோகன்லாலை சோட்டா பீம் என்றார். தற்போது சல்மானை கானை முட்டாள் என்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bollywood critic KRK said that Salman Khan, Sohail Khan combination is always a disaster.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil