»   »  ராணுவ வீரர்களுக்கு சல்யூட் அடித்து செல்பி எடுத்து மரியாதை செலுத்தும் நட்சத்திரங்கள்

ராணுவ வீரர்களுக்கு சல்யூட் அடித்து செல்பி எடுத்து மரியாதை செலுத்தும் நட்சத்திரங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: வருகின்ற ஆகஸ்ட் 15 ம் தேதி இந்தியா தனது 69 வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கின்றது, நமது நாட்டின் சுதந்திரத்திற்காக தமது இன்னுயிரை ஈந்து பல்வேறு தலைவர்கள் பெற்றுத் தந்த சுதந்திரத்தை தற்போது நமது நாட்டின் ராணுவ வீரர்கள் காத்து வருகின்றனர்.

வீடு, வாசல், மனைவி, குழந்தைகள் உற்றம் சுற்றம், நண்பர்கள் அனைவரையும் மறந்து மிகக் குளிரான பகுதிகளில் தங்கள் சுகதுக்கங்களை பொருட்படுத்தாது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரர்கள் இந்திய நாட்டின் உயரிய சொத்தாக திகழ்கின்றனர்.

இன்னும் 3 தினங்களில் வரவிருக்கும் சுதந்திர தினத்தில் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் பொருட்டு ரிலையன்ஸ் குழுமம் சல்யூட் செல்பி என்ற பிரசாரத்தை தொடங்கியுள்ளது. சமூக ஊடகங்கள் மூலம் மிகவும் பிரபலமடைந்து வரும் இந்த சல்யூட் செல்பியில் இந்திய நட்சத்திரங்கள் பலரும் தங்கள் உணர்வை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சில இந்திய நட்சத்திரங்களின் சல்யூட் செல்பியை இங்கு காணலாம்.

துணிச்சலான ஜவான்களுக்கு சல்யூட் - அமிதாப் பச்சன்

"தமது சுகதுக்கங்களை தியாகம் செய்து நம்மை பாதுகாத்திடும் நமது துணிச்சலான ஜவான்களுக்கு ஒரு சல்யூட்" என்று நடிகர் அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

துணிச்சலான வீரர்களுக்கு சல்யூட் - வீரேந்திர ஷேவாக்

இந்தியாவின் அதிரடி கிரிக்கெட் வீரரான வீரேந்திர ஷேவாக் " சல்யூட் செல்பி எடுத்து அதனை நமது புரோபைல் படமாக வைப்போம், நாட்டைக் காக்கும் துணிச்சலான வீரர்களுக்கு சல்யூட் என்று கூறியதோடு நீங்களும் என்னோடு இணைந்து கொள்ளுங்கள்" என்றும் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

நாட்டின் உண்மையான வீரர்கள் - சாய்னா நேவால்

பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவால் " நமது நாட்டின் உண்மையான வீரர்களுக்கு சல்யூட் செலுத்தி நீங்களும் என்னோடு இணைந்திடுங்கள்" என்று கூறியிருக்கிறார்.

இந்திய ராணுவத்திற்கு சல்யூட் - ஜி.வி.பிரகாஷ் குமார்

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் " இந்திய ராணுவத்திற்கு எனது சல்யூட் என்று பதிவிட்டிருக்கிறார்.

சுயநலம் இல்லாத வீரர்கள் - ஷாரூக்கான்

நமது நாட்டையும் குடும்பங்களையும் பாதுகாக்க சற்றும் சுயநலமில்லாது தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்யும் உண்மையான வீரர்களுக்கு சல்யூட் என்று நடிகர் ஷாரூக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

தொடர்ந்து ட்வீட்டுகளால் நிரம்பி வழிகிறது சல்யூட் செல்பி ஹெஷ்டேக், நாட்டின் உண்மையான வீரர்களுக்கு நாமும் நமது மரியாதையை செலுத்துவோம்.

English summary
#SaluteSelfie is a campaign started by Reliance Group to support the Indian Armed Forces, Celebrities Tribute to the Indian Army.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil