»   »  மோகன்லால் படத்தில் 'விக்ரம் வேதா' இசையமைப்பாளர்!

மோகன்லால் படத்தில் 'விக்ரம் வேதா' இசையமைப்பாளர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரஜினி, கமலை ஓரங்கட்டிய மோகன்லால்!- வீடியோ

சென்னை : 'விக்ரம் வேதா' இசையமைப்பாளரான சாம் சி.எஸ் புதிதாக மலையாளப் படத்துக்கு இசையமைத்துள்ளார். 'விக்ரம் வேதா' படத்தின் பி.ஜி.எம் ரசிகர்களால் வெகுவாகக் கொண்டாடப்பட்டது. வித்தியாசமான திரைக்கதைக்கு வலு சேர்த்தது அவரது பின்னணி இசை.

ஸ்ரீகுமார் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள மலையாளப் படம் 'ஒடியன்'. மோகன்லால் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், மஞ்சு வாரியர் மற்றும் பிரகாஷ்ராஜ் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Sam CS to composes BGM for malayalam movie

இந்தப் படத்தின் பாடல்களுக்கு ஜெயச்சந்திரன் இசையமைக்க, பின்னணி இசை அமைத்துள்ளார் சாம் சி.எஸ். இந்தப் படம் ஃபேன்டஸி த்ரில்லர் படம் என்பதால், பழைய காலத்து இசைக்கருவிகளைப் பயன்படுத்தி இசையமைத்துள்ளார் சாம்.

6 அடியில் உள்ள மூங்கில் புல்லாங்குழலை, அதை வாசிக்கத் தெரிந்த வயதான பெண்மணியை வாசிக்கவைத்து பின்னணி இசைக்குப் பயன்படுத்தியுள்ளாராம் சாம். 'கரு', 'கொரில்லா', 'லக்‌ஷ்மி', 'இரவுக்கு ஆயிரம் கண்கள்', 'மிஸ்டர் சந்திரமெளலி' உள்பட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார் சாம்.

English summary
Sam CS composes background score for 'Odiyan' malayalam movie lead by mohanlal.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X