Samantha Divorce: நாங்கள் இருவரும் பிரிகிறோம்.. விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட சமந்தா – நாக சைதன்யா

சென்னை: கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக நடிகை சமந்தாவும், மனைவி சமந்தாவை பிரிவதாக நாக சைதன்யாவும் சமூக வலைதளங்களில் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Recommended Video

Samantha divorced Chaitanya | Sam & Chay separated officially | Nagachaitanya

கடந்த சில மாதங்களாகவே நாக சைதன்யாவுக்கும் சமந்தாவுக்கும் இடையே மன கசப்பு ஏற்பட்டதாக பல்வேறு தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இருவரும் இணைந்து இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளனர்.

கணவன் மனைவி இல்லை

கணவன் மனைவி இல்லை

நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுவரை புகைந்து கொண்டிருந்த விவாகரத்து பிரச்சனை பொய் என அறிவிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கிடந்த நிலையில், இருவரும் இனி கணவன் மனைவியாக வாழப் போவதில்லை. நாங்கள் இருவரும் பிரிகிறோம் என பெரிய குண்டை தூக்கிப் போட்டுள்ளார்.

பிரைவசியை காப்பாற்றுங்க

பிரைவசியை காப்பாற்றுங்க

என்ன காரணத்திற்காக இருவரும் பிரிகின்றனர் என்பதை இருவருமே சொல்லவே இல்லை. மாறாக நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் மீடியா என அனைவருமே எங்களின் இந்த முடிவுக்கும் எங்களின் பிரைவசிக்கும் மதிப்பு கொடுங்கள் என்கிற கோரிக்கையை மட்டுமே வைத்துள்ளனர்.

நாக சைதன்யாவும் சொல்லிட்டாரு

நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் அறிவித்த நிலையில், நடிகர் நாக சைதன்யா தனது ட்விட்டர் பக்கத்தில் இருவரும் பிரிகிறோம் என்பதை பொதுவெளியில் அறிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் இவர்களது விவாகரத்து விவகாரம் கொழுந்து விட்டு எரிகிறது.

ஒரே ஸ்க்ரிப்ட்

ஒரே ஸ்க்ரிப்ட்

சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து அறிவித்துள்ள நிலையில், இருவரும் விவாகரத்து அறிவிப்பு ஸ்க்ரிப்டும் ஒன்றாகவே உள்ளதாக ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். இருவரது பெயர்கள் மட்டுமே மாறி மாறி இடம் பெற்றுள்ளதாகவும், இதற்கும் யாரோ ஒருவர் ஸ்க்ரிப்ட் எழுதி கொடுத்துள்ளார் என கலாய்த்து வருகின்றனர்.

வதந்தி இல்லை

வதந்தி இல்லை

லவ் ஸ்டோரி படத்தின் எந்தவொரு நிகழ்ச்சியிலும் நடிகை சமந்தா பங்கேற்காத நிலையில் இருவருக்கும் இடையேயான விரிசல் முற்றி விட்டதாக ஏகப்பட்ட மீடியாக்கள் தெரிவித்தன. ஆனால், இதெல்லாம் வதந்தி என சமந்தா தரப்பு சொல்லும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தற்போது வெளியான விவாகரத்து தகவல்கள் அனைத்துமே உண்மை என்பது தெளிவாகி உள்ளது.

50 கோடி ஜீவனாம்சம்

50 கோடி ஜீவனாம்சம்

நடிகர் நாக சைதன்யாவை நடிகை சமந்தா விவாகரத்து செய்தால் அவருக்கு 50 கோடி ரூபாய் ஜீவனாம்சம் தொகையாக வழங்கப்படும் உள்ளிட்ட தகவல்களும் சமூக வலைதளங்களில் ஏற்கனவே வலம் வந்த நிலையில், இருவரும் பிரிகிறோம் என கூறியிருப்பது ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

விவாகரத்தை அறிவித்த அமீர்கான்

விவாகரத்தை அறிவித்த அமீர்கான்

சமீபத்தில் நடிகர் அமீர்கான் மற்றும் அவரது மனைவி கிரண் ஆகியோர் இணைந்து விவாகரத்தை அறிவித்தனர். அதன் பின்னர் அமீர்கானின் லால் சிங் சத்தா படத்தில் நாக சைதன்யா இணைந்தார். நாக சைதன்யாவின் படத்தின் புரமோஷனுக்கும் நடிகர் அமீர்கான் ஹைதராபாத் வரை வந்தார். அமீர்கானின் விவாகரத்திற்கும் நாக சைதன்யா - சமந்தா விவாகரத்துக்கும் சம்மந்தம் இருக்குமோ? என்றும் நெட்டிசன்கள் ஏகப்பட்ட கேள்விகளை கிளப்பி வருகின்றனர்.

ரசிகர்கள் ஷாக்

ரசிகர்கள் ஷாக்

விரைவில் நாக சைதன்யாவும் சமந்தாவும் குழந்தை பெற்றுக் கொள்ள போகிறார்கள். விவாகரத்து பற்றி மீடியாக்களில் வெளியாகும் அத்தனையும் வதந்தி என சமந்தா லைவ் நிகழ்ச்சியில் கூறி விட்டார் என சந்தோஷப்பட்டு வந்த சமந்தா மற்றும் நாக சைதன்யா ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X