Don't Miss!
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் பிப்ரவரி 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு லாபகரமான காலமாக இருக்கப் போகுது...
- News
மக்களே நோட் பண்ணிக்கோங்க.. சில சாலைகளில் குப்பை கொட்டினால் அபராதம்..சென்னை மாநகராட்சி சூப்பர் பிளான்
- Automobiles
இது செம காராச்சே! இதோட விலையை திடீர்ன்னு இவ்வளவு கூட்டிட்டாங்க! காரணம் இது தான்!
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Sports
இந்திய அணிக்கு அடித்த செம லக்.. மேலும் ஒரு ஆஸி. வீரர் விலகல்.. பின்னடைவை சந்திக்கும் ஆஸ்திரேலியா
- Technology
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நான் ‘நம்பர் 1 ஹீரோயின்‘ இல்லை... மனம் திறந்த சமந்தா !
சென்னை : நான் நம்பர் 1 ஹீரோயின் இல்லை, அந்த இடத்தை பிடிக்க இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் என நடிகை சமந்தா கூறியுள்ளார்.
இன்ஸ்டாகிராம், ask me anything என்ற ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சமந்தா இவ்வாறு பதிலளித்துள்ளார்.
பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ள சமந்தா, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் கொடிகட்டி பறந்து வருகிறார்.

காதல் திருமணம்
சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். சுமார் 7 வருடத்திற்கு மேல் உருகி... உருகி... காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை சமந்தா மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா ஆகிய இருவரும் சில வருடங்களில் பிரிவார்கள் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

பிரிந்தனர்.
கடந்தாண்டு ஒரே நேரத்தில் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து நண்பர்களாக இருப்போம் என்கிற எமோஷ்னல் பதிவுடன் இருவரும் தங்களது விவாகரத்தை அறிவித்தனர். பிரிவு முடிவால் மன அழுத்தத்தில் இருந்த சமந்தா தற்போது படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

எதுவேண்டுமானால் கேட்கலாம்
எப்போதும் தன்னை பிஸியாகவே வைத்துக்கொள்ளும் சமந்தா ஜிம் ஒர்க் கவுட், இன்ஸ்டாகிராம் ரீல் வீடியோவை பதிவிட்டு என மனக்கவலை போக்கி வருகிறார். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், என்னிடம் எது வேண்டுமானாலும் கேட்கலாம் என்று தலைப்பில் ரசிகர்களிடம் கலந்துரையாடினார்.

நம்பர் 1 ஹீரோயின்
அதில், ஒரு நடிகர், சினிமாவில் நம்பர் 1 ஹீரோயின் இடத்தை பிடிக்க விருப்பம் இருக்கா என கேட்டார். அதற்கு சமந்தா, நம்பர் 1 ஹீரோயின் இடத்தை பிடிப்பதை விட, நல்ல படங்களில் நடித்து, எனது நடிப்பு திறனை மக்கள் பார்த்து பாராட்ட வேண்டும் என்பதே எனது ஆசை என்றார். இன்னொரு ரசிகர், உங்கள் வாழ்க்கையின் லட்சியம் என்ன என கேட்டார், சமந்தா நடிகை ஒருவர் இருந்தார் என எதிர்காலத்தில் அனைவரும் நினைத்துப்பார்க்கும்படி செய்வதே எனது லட்சியம் மன மனம் திறந்து பல கேள்விகளுக்கு சமந்தா பதில் கூறினார்.

சகுந்தலம்
நடிகை சமந்தா நடிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா,சகுந்தலம் உள்ளிட்டப் படங்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன. இதில், சகுந்தலம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இப்படத்தினை ருத்ரமாதேவி படத்தை இயக்கிய தெலுங்கின் முன்னணி இயக்குநர் குணசேகர், மகாபாரத கதையை அடிப்படையாகக் கொண்டு இயக்கி வருகிறார்.