»   »  சமந்தா திருமணத்திற்கு பிரபலங்கள் யாருக்கும் அழைப்பு கிடையாது

சமந்தா திருமணத்திற்கு பிரபலங்கள் யாருக்கும் அழைப்பு கிடையாது

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: நாக சைதன்யா, சமந்தா திருமணத்திற்கு திரையுலக பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை வரும் அக்டோபர் மாதம் 6ம் தேதி திருமணம் செய்து கொள்கிறார். அவர்களின் திருமணம் கோவாவில் நடைபெறுகிறது.

திருமண வரவேற்பு ஹைதராபாத்தில் நடக்கிறது.

பிரபலங்கள்

பிரபலங்கள்

சமந்தா, சைதன்யா திருமணத்திற்கு திரையுலக பிரபலங்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று நாகர்ஜுனா தெரிவித்துள்ளார். திருமண நிகழ்ச்சியில் இருவீட்டார் மட்டுமே கலந்து கொள்கிறார்கள்.

ஹைதராபாத்

ஹைதராபாத்

ஹைதராபாத்தில் நடக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு தான் திரையுலக பிரபலங்களை அழைப்பதாக நாகர்ஜுனா கூறியுள்ளார். நாகர்ஜுனா தனது இளைய மகன் அகிலின் படமான ஹலோ ரிலீஸாக உள்ள டென்ஷனில் உள்ளார்.

சமந்தா

சமந்தா

திருமணத்தன்று சமந்தா சைதன்யாவின் பாட்டி அணிந்த பட்டுப்புடவையை தான் உடுத்துகிறார். அந்த புடவையை புதுப்பித்து அவர் அணிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேனிலவு

தேனிலவு

சமந்தாவும் சரி, நாக சைதன்யாவும் சரி படங்களில் பிசியாக இருப்பதால் தேனிலவை தள்ளிப்போட்டுள்ளனர். திருமணம் முடிந்த 3வது நாள் இருவரும் படப்பிடிப்புக்கு செல்கிறார்கள்.

English summary
According to reports, celebrities are not invited for Samantha, Naga Chaitanya's wedding. The wedding will be attended by the families of the bride and groom.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil