»   »  நாக சைதன்யாவின் காதலுக்காக.. பெயரை மாற்றும் சமந்தா?

நாக சைதன்யாவின் காதலுக்காக.. பெயரை மாற்றும் சமந்தா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: திருமணத்திற்குப் பின் சமந்தா தனது பெயரை சமந்தா அக்கினேனி என மாற்றிக் கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்-தெலுங்கின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தாவுக்கும் தெலுங்கின் இளம் நடிகர்களில் ஒருவரான நாக சைதன்யாவிற்கும் வருகின்ற டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறவிருக்கிறது.

Samantha Changed her Name

இருவர் குடும்பத்தினரும் இதனை முறைப்படி அறிவிக்கவில்லையென்றாலும் நாகார்ஜுனா, நாக சைதன்யாவின் காதல் தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்து இருவரின் காதலையும் மறைமுகமாக உறுதி செய்தார்.

இதுதவிர சமந்தாவும் தனது கைவசம் உள்ள படங்களை விரைவாக முடித்துக் கொடுக்க ஆர்வம் காட்டி வருகிறார். மேலும் புதிய படங்கள் எதையும் சமந்தா ஒப்புக்கொள்ளவில்லை.

ஆகஸ்ட் மாதம் இருவரின் திருமண அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் திருமணத்திற்குப் பின் சமந்தா தன்னுடைய பெயரை சமந்தா அக்கினேனி என மாற்றிக் கொள்ளப்போவதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாக சைதன்யா குடும்பத்தினரின் பாரம்பரியப் பெயர் அக்கினேனி. பெங்காலிப் பெண்ணான அமலா, நாகார்ஜுனாவைத் திருமணம் செய்து கொண்ட பின் தனது பெயரை அமலா அக்கினேனி என்று மாற்றிக் கொண்டார்.

இதேபோல சமந்தா ருத் பிரபு என்ற தனது பெயரை சமந்தா அக்கினேனி என்று சமந்தாவும் மாற்றிக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

  English summary
  Sources said Samantha Marries Naga Chaitanya after she Changed her Name Samantha Akkineni.
  Please Wait while comments are loading...

  Tamil Photos

  Go to : More Photos

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil