»   »  தனது பெயரை மாற்றிக்கொண்ட சமந்தா!

தனது பெயரை மாற்றிக்கொண்ட சமந்தா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஐதராபாத் : பல்லாவரத்தில் வளர்ந்த பால்கோவா சமந்தா, இப்போது அக்கட தேசத்து மருமகளாகிவிட்டார். அகினேனி குடும்பத்திற்கு விளக்கேற்றப் போயிருக்கும் சமந்தாவை நாகார்ஜூனா குடும்பத்தினர் கொண்டாடுகிறார்கள்.

நாக சைதன்யா - சமந்தா ஆகியோரின் திருமணம் கடந்த வாரம் கோவாவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

வெவ்வெறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், முதலில் இந்து முறைப்படியும், அடுத்த நாள் கிறிஸ்தவ முறைப்படியும் திருமணம் செய்து கொண்டார்கள்.

சினிமா காதல்

சினிமா காதல்

'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'யே மாய சேஸாவே' படத்தில் காதலர்களாக இணைந்து நடித்த சமந்தாவும், சைதன்யாவும் காதலித்து வந்தார்கள். 'மனம்' படத்திலும் இருவரும் நெருக்கமான ஜோடியாக இணைந்து நடித்தனர்.

காதலுக்கு எதிர்ப்பு

காதலுக்கு எதிர்ப்பு

ஆரம்பத்தில் நாக சைதன்யா குடும்பத்தினர் இந்தக் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தநிலையில், பிறகு சமந்தாவின் குணநலன்களைப் பார்த்து தங்களது மருமகளாக ஏற்றுக்கொண்டனர்.

பாசமான மருமகள்

பாசமான மருமகள்

சைதன்யாவின் அப்பா நாகார்ஜூனாவுக்கு சமந்தா மேல் கொள்ளைப் பிரியம். திருமணத்திற்கு முன்பே சமந்தாவை தங்கள் வீட்டு மருமகள் என்றே அறிமுகப்படுத்தி வந்தார். அதனால், அப்போதிருந்தே அகினேனி குடும்பத்தில் ஒருவராகி விட்டார் சமந்தா.

சமந்தா அகினேனி

திருமணம் முடிந்தநிலையில், தற்போது சமந்தா ருத் பிரபு என்றிருந்த தனது ட்விட்டர் பக்கத்தின் பெயரை சமந்தா அகினேனி என மாற்றிக் கொண்டிருக்கிறார் சமந்தா.

பாவம் சமந்தா

'நானாருந்தா என் பேருக்குப் பின்னாடி உன் பேர போட்டுக்குறேனு சொல்லிருப்பேன். அநியாயமா ஆணாதிக்கவாதக் குடும்பத்துக்கு வாக்கப்பட்ருச்சு புள்ள..!' என ஒரு ரசிகர் ரிப்ளை செய்திருக்கிறார்.

English summary
The marriage of Naga Chaitanya and Samantha was held last week in relation to relatives and friends in a star hotel in Goa. At this stage, Samantha has now changed Samantha Akkineni as her Twitter page name from Samantha Ruth Prabhu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil