Don't Miss!
- Sports
ஆசிய கோப்பை விலகும் பாகிஸ்தான்? போட்டியை நடத்தும் அரேபிய நாடு.. நாளை முக்கிய முடிவு
- News
லைவ் வீடியோ.. அயோத்தி ராமர் கோவிலை இடிப்பதாக மிரட்டல்.. பிஎப்ஐயை சேர்ந்த 3 பேரிடம் என்ஐஏ விசாரணை!
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நாளுக்கு நாள் மோசம்... நடிப்பில் இருந்து ஓய்வு?: சமந்தா அதிர்ச்சி முடிவு... கவலையில் ரசிகர்கள்!
ஹைதராபாத்:
சமந்தா
நடித்த
யசோதா
திரைப்படம்
கடந்த
மாதம்
11ம்
தேதி
வெளியானது.
இதனைத்
தொடர்ந்து
சமந்தா
நடிப்பில்
சாகுந்தலம்,
குஷி
ஆகிய
திரைப்படங்கள்
விரைவில்
வெளியாகும்
என
எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில்,
சமந்தா
தொடர்ந்து
மயோசிடிஸ்
பாதிப்பால்
அவதிப்படுவதால்
ஒரு
அதிர்ச்சிகரமான
முடிவை
எடுத்துள்ளதாக
தகவல்
வெளியாகியுள்ளது.
பணம்,
பெயர்,
புகழுக்காக
அலையமாட்டேன்...உருக்கமாக
பேசிய
சமந்தா!

சூப்பர் ஹிட் அடித்த யசோதா
கோலிவுட், டோலிவுட்டில் முன்னணி நடிகையாக கலக்கி வரும் சமந்தா, கடைசியாக தமிழில் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடித்திருந்தார். விஜய் சேதுபதி, நயன் ஆகியோருடன் சமந்தா இணைந்து நடித்த இந்தப் படம் ரசிகர்களின் வரவேற்போடு வெற்றிப் பெற்றது. இதனையடுத்து சமந்தா லீடிங் கேரக்டரில் நடித்த 'யசோதா' பான் இந்தியா படமாக கடந்த 11ம் தேதி ரிலீஸானது. ஆக்ஷன் பிளஸ் சென்டிமெண்டலாக உருவான இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸில் 33 கோடிக்கும் மேல் வசூலித்து மாஸ் காட்டியிருந்தது. இதனால், சமந்தாவின் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படங்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகமானது.

சமந்தாவின் சாகுந்தலம், குஷி
யசோதா படத்தில் நடித்து வரும் போதே சாகுந்தலம், குஷி ஆகிய படங்களின் ஷூட்டிங்கிலும் கலந்துகொண்டார் சமந்தா. குஷி படத்தில் சமந்தாவுடன் விஜய் தேவரகொண்டா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது இதில், சாகுந்தலம் திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சாகுந்தலம், குஷி படங்களை முடித்துவிட்டு சமந்தா கொஞ்சம் பிரேக் எடுக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.

மயோசிடிஸ் பிரச்சினையில் சமந்தா
சில மாதங்களுக்கு முன்னர் சமந்தாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஒருகட்டத்தில் சமந்தாவே அதுகுறித்து மனம் திறந்தார். அதில், தனக்கு மயோசிடிஸ் நோய் பாதிப்பு இருப்பதாகவும், அதனால் தான் ரொம்பவே கஷ்ட்டப்பட்டதாகவும் உருக்கமாக தனது இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். மேலும் உடலில் குளுகோஸ் ஏற்றியபடி சமந்தா சிகிச்சை எடுத்துகொள்ளும் போட்டோவையும் ஷேர் செய்திருந்தார். அதேபோல், யசோதா படத்தின் ப்ரோமோஷன் பேட்டியிலும் தனது உடல்நிலை குறித்து கண் கலங்கினார்.

கவலையில் ரசிகர்கள்
மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா குறித்து, நடிகை பியா பாஜ்பாய்யும் சமீபத்தில் மனம் திறந்து பேசியிருந்தார். அதில், "சமந்தாவின் உடல்நிலை பற்றி எனக்கும் நன்றாக தெரியும். மயோசிடிஸ் பிரச்சினை இருந்தால் எழுந்து நடக்கவே முடியாது" எனக் கூறியிருந்தார். இந்த சூழலில், உடல்நிலை மோசகமாக இருப்பதால் நடிப்பில் இருந்து சிறிது காலம் ஓய்வெடுக்க சமந்தா திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஹைதராபாத் வீட்டில் ஓய்வில் இருக்கும் சமந்தா, நலமாக இருப்பதாகவே அவரது மேலாளர் சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார். ஆனால், தற்போது சமந்தா சினிமாவில் இருந்து தற்காலிகமாக ஓய்வெடுக்கவுள்ளதாக வெளியான தகவல், அவரது ரசிக்ர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.